
பணத்தை கணக்கிடும் பணியில் வருமான வரித்துறை அதிகாரிகள்
தொழிலதிபர் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில் பறிமுதல் செய்த வருமான வரித்துறையினர், 13 மணிநேரமாக எண்ணியுள்ளனர்.
மகாராஷ்டிரத்தில் ரியல் எஸ்டேட் மற்றும் துணி வியாபாரங்களில் ஈடுபட்டு வரும் தொழிலதிபருக்கு சொந்தமான இடங்களில் ஆகஸ்ட் 1 முதல் 8ஆம் தேதி வரை வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டனர்.
இந்த சோதனையில், ரூ. 56 கோடி பணம், 32 கிலோ எடையிலான தங்கம், வைர நகைகள் மற்றும் ஆவணங்கள் என மொத்தம் ரூ. 100 கோடிக்கு மேல் பறிமுதல் செய்தனர்.
இதையும் படிக்க | ராணுவ முகாமில் பயங்கரவாதிகள் தற்கொலைப்படைத் தாக்குதல்: 3 வீரர்கள் பலி
சோதனையில் பறிமுதல் செய்யப்பட்ட பணத்தை இயந்திரங்களை கொண்டு கணக்கிடுவதற்கு 13 மணிநேரம் ஆனதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்து, சொத்துகள் மற்றும் ஆவணங்கள் சரிபார்த்த பிறகு கணக்கில் வராத சொத்துகள் குறித்து விசாரணை மேற்கொள்ளப்படவுள்ளன.