

புது தில்லி: ராஜீவ் காந்தியின் பிள்ளைகளான ராகுல் மற்றும் பிரியங்கா இருவரும் ரக்ஷா பந்தன் விழா கொண்டாடப்படும் இன்றைய நாளில், தங்களது சுட்டுரைப் பக்கத்தில் இருவரும் ஒன்றாக பயணித்த தருணங்களில் எடுத்த புகைப்படங்களை பகிர்ந்து கொண்டுள்ளனர்.
தற்போது காங்கிரஸ் கட்சியின் தலைவர்களில் முக்கியமானவர்களாகக் கருதப்படும் இருவரும், தங்களது சிறு வயது முதலே நெருங்கிய சகோதர உணர்வுடன் வளர்ந்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளராக இருக்கும் பிரியங்கா காந்தியை விட, 52 வயதாகும் காங்கிரஸ் கட்சியின் எம்.பி. ராகுல் காந்தி, இரண்டு வயது மூத்தவர். இருவரும் தங்களது சமூக வலைத்தளப் பக்கத்தில் ரக்ஷா பந்தன் வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டுள்ளனர்.
இதையும் படிக்க | 'நாய் கூட சாப்பிடாது' தட்டை கையில் ஏந்தியபடி கதறி அழும் காவலர்
சிறு வயது முதலே நானும் எனது சகோதரி பிரியங்காவும் ஒன்றாகவே வளர்ந்தோம். ஏராளமான உயர்வு தாழ்வுகளை எங்கள் வாழ்க்கையில் நாங்கள் ஒன்றாகவே சந்தித்தோம். எப்போதும் ஒருவருக்கு ஒருவர் பலமாக இருந்திருக்கிறோம்.
இன்று ரக்ஷா பந்தன் விழா, அனைத்து சகோதர, சகோதரிகளுக்கும் இடையேயான அன்பு எப்போதும் நீடித்து நிலைத்திருக்க வாழ்த்துகிறேன் என்று ராகுல் குறிப்பிட்டுள்ளார்.
இதனுடன் ராகுல் - பிரியங்கா இணைந்திருக்கும் புகைப்படங்களையும் பகிர்ந்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.