26/11 போன்ற தாக்குதல் மிரட்டல் தீவிரமாக விசாரிக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர்

மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வந்த கடந்த 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும்.
26/11 போன்ற தாக்குதல் மிரட்டல் தீவிரமாக விசாரிக்கப்படும்: மகாராஷ்டிர துணை முதல்வர்

மும்பை போக்குவரத்துக் காவல்துறையின் உதவி எண்ணுக்கு வாட்ஸ்ஆப் மூலம் வந்த கடந்த 26/11 போன்ற தாக்குதல் நடத்தப்படும் என்ற மிரட்டல் குறித்து தீவிரமாக விசாரிக்கப்படும் என மகாராஷ்டிர மாநிலத்தின் துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் தெரிவித்துள்ளார்.

இந்த மிரட்டல் செய்தி பாகிஸ்தானை மையமாக வைத்து இயங்கும் தொலைபேசியில் வந்ததாகக் கூறப்படுகிறது. காவல்துறையின் வாட்ஸ்ஆப் உதவி எண்ணுக்கு வந்த செய்தியில் 6 பேர் கொண்ட குழுவால் இந்தத் தாக்குதல் நடத்தப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மிரட்டல் செய்தியை அனுப்பியுள்ள அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் மீது இந்திய தண்டனைச் சட்டம் பிரிவு 506ன் கீழ் மும்பை காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், இந்த அச்சுறுத்தல் குறித்து மகாராஷ்டிர மாநில துணை முதல்வர் தற்போது பேசியுள்ளார்.

அதில் அவர் கூறியிருப்பதாவது: “ நாங்கள் இந்த அச்சுறுத்தலை தீவிரமாக கவனத்தில் எடுத்துக் கொள்கிறோம். இந்த மிரட்டல் குறித்து அதிக கவனத்துடன் விசாரணை மேற்கொள்ளப்படும். இது குறித்து மும்பை காவல் துறை கூடுதல் தகவல்களை வழங்கும்.” என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com