
கோப்புப் படம்
அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சித்து பேசக்கூடாதென உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
கடந்தாண்டு கரோனா இரண்டாம் அலையின் போது பாபா ராம்தேவ், “ஆக்சிஜன் கிடைக்காமலோ அல்லது சிகிச்சை கிடைகாமலோ அல்ல; அலோபதி மருத்துவத்தால் லட்சக்கணக்கான மக்கள் இறந்தனர். முட்டாள்தனமான காசை பிடுங்கும் முறைதான் அல்லோபதி” எனக் கூறினார். எனவே இந்திய மருத்துவ சங்கம் வழக்கு தொடர்ந்தது.
பாபா ராம்தேவ்க்கு எதிராக இந்திய மருத்துவ சங்கம் தொடர்ந்த வழக்கில் ஒன்றிய அரசும் பதஞ்சலி நிறுவனமும் பதிலளிக்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
"அலோபதி மருத்துவ முறையை பாபா ராம்தேவ் விமர்சித்து பேசக்கூடாது; யோகா மருத்துவ முறையை விளம்பரப்படுத்த, அலோபதியை விமர்சிப்பது ஏன்? அவர் சொல்லும் முறையில் மட்டும் எல்லாவற்றையும் குணப்படுத்திவிட முடியுமா? " என உச்ச நீதிமன்ற நீதிபதி என்.வி.ரமணா கேள்வி எழுப்பியுள்ளார்.