எம்.எல்.ஏ.க்களிடம் பேரம்: தில்லி பேரவையில் நாளை(ஆக.26) சிறப்புக் கூட்டம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுப்பியுள்ள நிலையில், தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்களை பாஜக விலைக்கு வாங்க முயற்சி செய்வதாக குற்றச்சாட்டு எழுந்துள்ள நிலையில், தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் வெள்ளிக்கிழமை கூடுகிறது.

தில்லி சுகாதாரத்துறை அமைச்சர் சத்யேந்திர ஜெயின் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள நிலையில், துணை முதல்வர் மணீஷ் சிசோடியா வீட்டில் சோதனை செய்த சிபிஐ வழக்குப்பதிவு செய்துள்ளது.

இதற்கிடையே, ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் பாஜகவில் இணைந்தால் ரூ. 20 கோடி கொடுப்பதாக பாஜகவிலிருந்து பேரம் பேசப்பட்டதாகவும், இணையாவிட்டால் பொய் வழக்குத் தொடரப்படும் என்று மிரட்டல் விடுக்கப்பட்டதாகவும் ஆம் ஆத்மி தரப்பில் நேற்று குற்றச்சாட்டு வைக்கப்பட்டது.

இந்நிலையில், தில்லி சட்டப்பேரவையின் சிறப்புக் கூட்டம் நாளை காலை 11 மணிக்கு நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, இன்று காலை 11 மணிக்கு தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் வீட்டில், ஆம் ஆத்மி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறவுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com