தமிழக ஆளுநராக ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் - ஆர். என். ரவி மேற்கு வங்க ஆளுநராக மாற்றம் இறுதிப்போட்டியில் இந்தியா! இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!லடாக் துணைநிலை ஆளுநர் பதவி விலகல்?தமிழ்நாடு ஆளுநராக அஜய்குமார் பல்லா?மத்திய கிழக்கில் பதற்றம்: சிபிஎஸ்இ தேர்வுகள் ரத்து!மேற்கு வங்க ஆளுநர் ராஜிநாமா! ஆர்.என். ரவி நியமனம்!இந்தியாவுக்கு எரிவாயு வழங்க ஆஸ்திரேலியா, கனடா முடிவு?தேர்தல் விதிமீறல்: ஓபிஎஸ் மீதான 4 வழக்குகள் ரத்து!ஈரானின் தலைவர் கமேனி கொலை! - இந்தியா இரங்கல்!ராணுவ மோதல் பிரச்னைக்குத் தீர்வு அல்ல: பிரதமர் மோடிஈரான் வெளியுறவு அமைச்சருடன் ஜெய்சங்கர் உரையாடல்!சென்செக்ஸ் 900 புள்ளிகள் உயர்வு! ஐடி பங்குகள் மட்டும் சரிவு!
/

மகாராஷ்டிரம்: ஒரே ஆண் நண்பருக்காக அடித்துக் கொண்ட இரு இளம் பெண்கள்

மகாராஷ்டிரத்தின் பைதன் மாவட்டத்தில் பொது இடத்தில் ஒரே ஆண் நண்பருக்காக இரு இளம் பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

News image
Updated On :26 ஆகஸ்ட் 2022, 2:16 pm

DIN

மகாராஷ்டிரத்தின் பைதன் மாவட்டத்தில் பொது இடத்தில் ஒரே ஆண் நண்பருக்காக இரு இளம் பெண்கள் அடித்துக் கொண்ட சம்பவம் அரங்கேறியுள்ளது.

17 வயது நிரம்பிய இரண்டு இளம் பெண்கள் பொது இடத்தில் சண்டையிட்டுக் கொண்டதாக காவல் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் நேற்று முன் தினம் (ஆகஸ்ட் 24) காலையில் பைதன் மாவட்டத்தில் நிகழ்ந்துள்ளது. சம்பவத்தன்று இளம் பெண் ஒருவர் தனது ஆண் நண்பருடன் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். இந்த விஷயத்தைக் கேள்விப்பட்ட மற்றொரு இளம் பெண் பேருந்து நிலையத்திற்கு வந்துள்ளார். அந்த பெண் வந்த சிறிது நேரத்திலேயே அவர்களுக்குள் வாக்குவாதம் தொடங்கி விட்டது. ஒரு கட்டத்தில் இருவருக்கும் இடையேயான வாக்குவாதம் அடிபுடி சண்டையாக மாறியது. பேருந்து நிலையம்  என்று கூட பார்க்காமல் அந்த இரு பெண்களும் சண்டையிட அந்த ஆண் நண்பர் பேருந்து நிலையத்தை விட்டு நழுவி தப்பிச் சென்றார்.

இதையடுத்து, அந்த இரு இளம் பெண்களும் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். பின்னர், காவல் துறையினர் அவர்கள் இருவருக்கும் அறிவுரை கூறி வீட்டிற்கு அனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.