காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது? குலாம் நபி ஆசாத்தின் மிக நீண்ட கடிதம்

ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.
காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது? குலாம் நபி ஆசாத்தின் மிக நீண்ட கடிதம்
காங்கிரஸ் கட்சியில் என்ன நடக்கிறது? குலாம் நபி ஆசாத்தின் மிக நீண்ட கடிதம்

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்கள் ஒவ்வொருவராக கட்சியிலிருந்து விலகிவரும் நிலையில், ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வர், முன்னாள் மத்திய அமைச்சர், மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் காங்கிரஸ் கட்சியிலிருந்து விலகியுள்ளார்.

பதவி விலகல் குறித்து சோனியா காந்திக்கு குலாம் நபி ஆசாத் எழுதியிருக்கும் மிக நீண்ட கடிதத்தில், காங்கிரஸ் கட்சியில் ஏற்பட்டிருக்கும் சிக்கல்களும், அதற்கான காரணங்களும் என மிக விரிவான அவரது பார்வையை பகிர்ந்து கொண்டுள்ளார்.

முதிர்ச்சியற்ற, குழந்தைத் தன்மையை வெளிப்படுத்துவதாகவும், கட்சியில் இருந்த கலந்தாலோசனை முறையை முற்றிலும் ஒழித்துக்கட்டிவிட்டதாகவும் ராகுல் மீது பகிரங்கக் குற்றச்சாட்டையும் அவர் முன் வைத்துள்ளார்.

பதவி விலகில் கடிதத்தில் கட்சியின் இடைக்காலத் தலைவர் சோனியா காந்தியை புகழ்ந்திருக்கும் குலாம் நபி ஆசாத், ராகுல் மீது காரசார புகாரை முன் வைக்கிறார்.

அவர் கூறியிருப்பதாவது, 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் தோல்வியடையக் காரணமே ராகுல் காந்திதான். அதுதான் கட்சிக்கு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துவிட்டது. அது முதல் கட்சி தேர்தல்களில் வெற்றி பெற போராடி வருகிறது.

மிக துரதிருஷ்டவசமாக அரசியலுக்குள் ராகுல் காந்தி நுழைந்தார், குறிப்பாக, உங்களால், கடந்த 2013ஆம் ஆண்டு ஜனவரி மாதம் கட்சியின் துணைத் தலைவராக நியமிக்கப்பட்டார். அது முதல், கட்சியின் கலந்தாலோசனை என்ற முறையே ராகுல் காந்தியால் ஒட்டுமொத்தமாக அழித்து ஒழிக்கப்பட்டது.

அனைத்து மூத்த மற்றும் அனுபவம் வாய்ந்த தலைவர்கள் ஓரங்கட்டப்பட்டனர். அனுபவமில்லாத, துதிபாடுபவர்களின் கூட்டம் ஒன்று கட்சியை வழிநடத்தத் தொடங்கியிருந்தது.

அவரது அனுபவமில்லாத, குழந்தைத் தனமான போக்குக்கு ஒரு சிறந்த உதாரணம் என்றால், அரசாணையை, ஊடகங்களுக்கு முன்னிலையில் கிழித்ததுதான். இதுபோன்ற குழந்தைத் தனமான நடவடிக்கைகள்தான், 2014ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் காங்கிரஸ் அடைந்த தோல்விக்குக் காரணம் என்று கட்சி கடந்த காலங்களில் சந்தித்த தோல்விகளைக் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

அது முதல் தொடர்ந்து தோல்விகளைச் சந்தித்து, தேர்தல்களில் வெற்றி பெற காங்கிஸ் கடும் முயற்சி செய்து வருகிறது. தற்போது, இரண்டே மாநிலங்களில்தான் காங்கிரஸ் ஆட்சியில் உள்ளது. மிகக் குறைந்த பலத்துடன் இரண்டு மாநில அரசில் கூட்டணியில் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.

நீங்கள் பெயருக்குத்தான் கட்சித் தலைவராக இருந்தீர்கள். ஆனால், அனைத்து முடிவுகளும் ராகுல் காந்தி அல்லது அவருக்குப்பதிலாக அவரது பாதுகாவலர்கள், தனி உதவியாளர்களால் எடுக்கப்பட்டது என்றும் குறிப்பிட்டுள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com