குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்: மத்திய அமைச்சர்

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார். 
குலாம் நபி ஆசாத் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டார்: மத்திய அமைச்சர்

காங்கிரஸில் இருந்து குலாம் நபி ஆசாத் இறுதியாக தன்னை விடுவித்துக் கொண்டதாக மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.

காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம் நபி ஆசாத் நேற்று (ஆகஸ்ட் 26) காங்கிரஸில் இருந்து விலகுவதாக தெரிவித்தார். இதனையடுத்து, மத்திய அமைச்சரும் மற்றும் காங்கிரஸில் குலாம் நபி ஆசாத் உடன் பயணித்தவருமான மத்திய அமைச்சர் சிந்தியாவின் இந்த கருத்து முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

இது குறித்து பத்திரிக்கையாளர்கள் சந்திப்பில் மத்திய அமைச்சர் கூறியதாவது: “ காங்கிரஸில் நீண்ட ஆண்டுகளாக நீடித்து வந்த குழப்பம் தற்போது தெளிவாகத் தெரிகிறது. குலாம் நபி ஆசாத் ஒரு வழியாக இறுதியில் காங்கிரஸில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டுள்ளார். காங்கிரஸின் அனைத்து விதமான பதவிகளில் இருந்தும் குலாம் நபி ஆசாத் விலகியுள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியின் குழந்தைத்தனமான முடிவுகளை அவர் கடுமையாக தாக்கிப் பேசியுள்ளார்.” என்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com