போதைப் பொருள் கடத்தலுக்கு ஆள் தேவை: விளம்பரமே வருகிறதா?

பெங்களூருவின் கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில், புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.99 கோடி மதிப்புள்ள 14 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.
போதைப் பொருள் கடத்தலுக்கு ஆள் தேவை: விளம்பரமே வருகிறதா?
போதைப் பொருள் கடத்தலுக்கு ஆள் தேவை: விளம்பரமே வருகிறதா?


பெங்களூரு: பெங்களூருவின் கேம்பேகௌடா சர்வதேச விமான நிலையத்தில், புலனாய்வுத் துறையினர் நடத்திய சோதனையில் ரூ.99 கோடி மதிப்புள்ள 14 கிலோ ஹெராயின் பறிமுதல் செய்யப்பட்டது.

இதனைக் கடத்தி வந்த தெலங்கானாவைச் சேர்ந்த ஆசிரியர் கைது செய்யப்பட்டுள்ளது. அவரிடமிருந்த இரண்டு டிராலி பைகளில் 14 கிலோ ஹெராயின் இருந்தது சோதனையின் போது கண்டுபிடிக்கப்பட்டது.

அவரிடம் நடத்திய விசாரணையில், ஆன்லைன் மூலம் வேலை தேடியபோது, எத்தியோப்பியாவிலிருந்து போதைப் பொருள் கடத்தல் வேலை கிடைத்ததாக ஆசிரியர் கூறியிருந்தது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது அதிகாரிகளுக்கு.

ஆகஸ்ட் 19ஆம் தேதி, எத்தியோப்பியா தலைநகர் அடிஸ் அபாபாவிலிருந்து பெரிய அளவில் ஹெராயின் கடத்தி வரப்படுவதாக புலனாய்வுத்துறைக்குக் கிடைத்தத் தகவலை அடுத்து விமான நிலையத்தில் சோதனைப் பணியில் ஈடுபட்டனர். அப்போது, 52 வயது மதிக்கத்தக்க தெலங்கானாவைச் சேர்ந்த நபரிடம் இருந்த இரண்டு டிராலி பைகளின் அடிப்பாகத்தில் கருப்பை டேப்களால் சுற்றப்பட்டிருந்த பொட்டலங்களில் 14 கிலோ ஹெராயின் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு கிலோ ஹெராயின், சந்தையில் ரூ.7 கோடிக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

விசாரணையில், மாணவர்களுக்கு வீட்டிலிருந்து டியூஷன் எடுத்து வரும் அந்த நபர், சில மாதங்களுக்கு முன்பு, ஆன்லைன் மூலம் வேலை தேடிய போது, வெளிநாடு சென்று வரும் வகையிலான வேலை செய்ய விருப்பமுள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் என்று விளம்பரம் வந்திருந்தது. அந்த எண்ணில் தொடர்பு கொண்டபோது, அடிஸ் அபாபா பகுதியைச் சேர்ந்த ஒருவர் போனை எடுத்துப் பேசினார்.

அவர், எத்தியோப்பியா சென்று அங்கிருந்து போதைப் பொருளைக் கடத்திக் கொண்டு இந்தியா வர வேண்டும் என்று கூறியுள்ளனர். இப்படித்தான் இந்த கடத்தல் கும்பலிடம் தான் சேர்ந்ததாகக் கூறியுள்ளார்.

ஆப்ரிக்க மக்களை கடத்தலுக்குப் பயன்படுத்தும் போது ஆபத்து அதிகம் என்பதாலும், அவர்களை போதைப் பொருள் தடுப்பு அதிகாரிகள் அதிகம் கவனிப்பதால், போதைப் பொருள் கடத்தல் கும்பல்கள் இந்தியர்களை அதிகளவில் இந்தப் பணிக்கு தேர்வு செய்வதாகவும் கூறியுள்ளார்.

இதில் தொடர்புடைய யாரையும் தான் நேரில் பார்க்கவில்லை, தன்னுடைய புகைப்படம் மூலம்தான் என்னை அவர்கள் தொடர்பு கொண்டு போதைப் பொருளைக் கொடுத்ததாகவும் கூறியுள்ளார்.

போதைப் பொருள் கடத்தல் கும்பல் இப்படி ஆன்லைன் மூலம் வெளிப்படையாகவே வேலைக்கு ஆள் தேவை என்று விளம்பரம் செய்திருப்பது கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com