'ஆரோக்கிய சுற்றுலாவையே ஊக்குவிக்கிறோம்: போதைப்பொருள்களை அல்ல'

கோவாவில் ஆன்மிக மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாவையே ஊக்குவிப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 
பிரமோத் சாவந்த்
பிரமோத் சாவந்த்


கோவாவில் ஆன்மிக மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாவையே ஊக்குவிப்பதாக முதல்வர் பிரமோத் சாவந்த் புதன்கிழமை தெரிவித்துள்ளார். 

விநாயகர் சதுர்த்தி நாடு முழுவதும் இன்று (ஆக.31) கொண்டாடப்பட்டு வருகிறது. அந்தவகையில், கோவா முதல்வர் பிரமோத் சாவந்த் தனது வீட்டில் விநாயகர் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தி குடும்பத்துடன் வழிபாடு செய்தார். 

பின்னர் ஏஎன்ஐ செய்தி நிறுவனத்திடம் பேசிய பிரமோத் சாவந்த், கோவாவில் போதைப்பொருள் தடுப்புப் பிரிவை வலுப்படுத்தி வருகிறோம். மேலும் அரசு சார்பில் போதைப்பொருள் விழிப்புணர்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கோவாவில் ஆன்மிக மற்றும் ஆரோக்கியமான சுற்றுலாவை மட்டுமே ஊக்குவிக்கிறோம். போதைப்பொருள் நிறைந்த சுற்றுலாவை அல்ல.

விநாயகர் சதுர்த்தியையொட்டி சுமார் 33 லட்சம் குடும்பங்கள் பயன்பெறும் வகையில், பல்வேறு நலத் திட்டங்கள் வகுக்கப்பட்டு அதற்காக ரூ.146 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது எனக் குறிப்பிட்டார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com