
கோப்புப்படம்
ஜெய்ப்பூர்: ராஜஸ்தானில் குளிரின் தாக்கம் அதிகரித்து வரும் நிலையில், ஃபதேபூரில் வெப்பநிலை நேற்று மேலும் குறைந்து மிகவும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 2 டிகிரி செல்சியஸ் பதிவானதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
அங்கு பகலில் வெப்பம், இரவில் குளிர் என்று காலநிலை மாறி மாறி வருகிறது.
இதேபோல சுருவில் குறைந்தபட்ச வெப்பநிலையாக 3.5 டிகிரி செல்சியஸ், கரௌலியில் 4 டிகிரி செல்சியஸ், நாகூரில் 6.1 டிகிரி செல்சியஸ், பில்வாராவில் 6.5 டிகிரி செல்சியஸ், பிலானியில் 7.3 டிகிரி செல்சியஸ், சிகாரில் 7.5 டிகிரி செல்சியஸ், கோட்டாவில் 8 டிகிரி செல்சியஸ் பதிவானதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஜெய்ப்பூரில் அதிகபட்ச வெப்பநிலை 26 டிகிரி செல்சியஸும் குறைந்தபட்ச வெப்பநிலை 7.3 டிகிரி செல்சியஸும் பதிவாகியுள்ளது.
முக்கிய செய்திகளை உடனுக்குடன் பெற... 'தினமணி'யின் வாட்ஸ்ஆப் செய்திச் சேவையில் இணைந்திருங்கள்...
தினமணி channel on WhatsApp: https://whatsapp.com/channel/0029Va60JxGFcowBIEtwvB0G