நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கியது!

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்
குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர்

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இரு அவைகளிலும் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியுள்ள நிலையில் டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.  இதில், பல் மருத்துவ ஆணையம் மசோதா, வன பாதுகாப்பு மசோதா, கடலோர மீன் வளர்ப்பு ஆணைய திருத்த மசோதா உள்பட 16 மசோதாக்கள் தாக்கல் செய்ய மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

முதல்முறையாக குடியரசுத் துணைத் தலைவர் ஜகதீப் தன்கர் தலைமையில் மாநிலங்களவை கூடியுள்ளது. அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் உள்பட மாநிலங்களவை உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

மக்களவை கூட்டம் தொடங்கியவுடன் மறைந்த உறுப்பினர்களுக்கு அஞ்சலி தெரிவித்து ஒரு மணிநேரம் கூட்டத்தொடரை அவைத் தலைவர் ஓம் பிர்லா ஒத்திவைத்தார்.

இரு அவைகளிலும் விலை உயர்வு, பணவீக்கம், வேலையிண்மை, பொருளாதாரத்தில் நலிவுற்றவர்களுக்கான இடஒதுக்கீடு, இந்திய - சீனா எல்லைப் பிரச்னை உள்ளிட்டவை எழுப்பி மத்திய அரசுக்கு எதிர்க்கட்சிகள் நெருக்கடி கொடுக்க திட்டமிட்டுள்ளனர்.

முதல் நாளான இன்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் இரு அவைகளிலும் வெளியுறவு கொள்கை குறித்த அறிக்கையை தாக்கல் செய்யவுள்ளார்.

மேலும், புதிய நாடாளுமன்ற கட்டடம் கட்டப்பட்டு வரும் நிலையில், இந்த கூட்டத்தொடரே இந்த கட்டடத்தில் நடைபெறும் கடைசி கூட்டமாக இருக்கலாம். குளிர்கால கூட்டமே புதிய கட்டடத்தில்தான் நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. சிறு தாமதம் காரணமாக அடுத்த பட்ஜெட் தொடரை புதிய கட்டடத்தில் நடத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com