கவுன்சிலர்களை வாங்க ரூ.100 கோடியில் திட்டம்? பாஜக மீது ஆம் ஆத்மி பகீர் குற்றச்சாட்டு

மேயர் தேர்தலில் மாற்றி வாக்களிக்க ஆம் ஆத்மி கவுன்சிலர்களுக்கு பாஜக ரூ.50 லட்சம் வரை தருவதாக பேரம் பேசியிருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அண்மையில் நடைபெற்ற புது தில்லி மாநகராட்சித் தேர்தலில் வென்ற ஆம் ஆத்மி கவுன்சிலர்களை வாங்குவதற்கு பேரம் பேசும் தரம் தாழ்ந்த செயலில் பாஜக ஈடுபட்டிருப்பதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இதுவரை எம்எல்ஏக்களை வாங்கி, ஆட்சியைக் கவிழ்க்கும் யுக்தியை மேற்கொண்டு வந்த பாஜக, தற்போது கவுன்சிலர்களையும் வாங்க திட்டமிட்டுள்ளதாக ஆம் ஆத்மியின் முக்கிய தலைவரும், எம்.பி.யுமான சஞ்சய் சிங் தெரிவித்துள்ளார்.

மூன்று கவுன்சிலர்களுடன் இன்று செய்தியாளர்களை சந்தித்த சஞ்சய் சிங், புது தில்லி மாநகராட்சித் தேர்தலில் 30க்கும் குறைவான இடங்களைப் பெற்ற பாஜக, எவ்வாறு மகாராஷ்டிரம், அருணாசலம், உத்தரகண்ட், மத்தியப் பிரதேசம், கர்நாடகம், கோவா, குஜராத் மாநிலங்களில் எம்எல்ஏக்களை வாங்கும் குதிரை பேரத்தில் ஈடுபட்டதோ, அவ்வாறு கவுன்சிலர்களையும் வாங்கும் தரம் தாழ்ந்த அரசியலை செய்துள்ளது.

பணத்தைக் காட்டியும் மிரட்டல் விடுத்தும் மக்களின் விருப்பத்தை அவமதித்து, நாட்டின் ஜனநாயகத்தைக் கொல்பவர்கள் மீது தில்லி காவல்துறை ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

30க்கும் குறைவான இடங்களைப் பெற்ற போதும்,பாஜகவைச் சேர்ந்தவர்தான் மேயராக வேண்டும் என்று அக்கட்சி கருதுகிறது. எனவே, வெறும் 10 கவுன்சிலர்களை வாங்க ரூ.100 கோடியில் திட்டமிடப்பட்டுள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஒரு கவுன்சிலருக்கு ரூ.10 கோடி குதிரைப் பேரத்தில் ஈடுபடுகிறது பாஜக என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
 
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com