ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!

மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஆளும் கட்சியும் தோ்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மக்கள் காப்பாற்றிவிட்டனர்.
ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
ஹிமாசலில் பாஜக எப்படி தோற்றிருக்கிறது என்று பாருங்கள்!
Published on
Updated on
2 min read

ஹிமாசலில் மொத்தமுள்ள 68 தொகுதிகளில் 40 தொகுதிகளைக் கைப்பற்றி காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ளது. இதன் மூலம், மாநிலத்தில் 1985-ஆம் ஆண்டுக்குப் பிறகு எந்த ஆளும் கட்சியும் தோ்தலில் வெற்றி பெற்றதில்லை என்ற வரலாற்றை மக்கள் காப்பாற்றிவிட்டனர்.

ஆனால், மலைப்பிரதேசமான ஹிமாசலில், பாஜக எவ்வாறு காங்கிரஸ் கட்சியிடம் தோல்வியடைந்திருக்கிறது என்ற தரவுகளை எடுத்துப் பார்த்தால், பாஜகவினரைப் போல படிப்பவர்களும் ஆடித்தான் போவார்கள்.

ஹிமாசலில் ஒரே கட்டமாக சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற்றது. அதில் பதிவான வாக்குகள் வியாழக்கிழமை எண்ணப்பட்டு அறிவிக்கப்பட்டன. காங்கிரஸ் 40 தொகுதிகளில் வெற்றி பெற்றது. பாஜக 25 தொகுதிகளிலும், சுயேச்சைகள் 3 தொகுதிகளிலும் வெற்றி பெற்றன. அங்கு 67 தொகுதிகளில் போட்டியிட்ட ஆம் ஆத்மி அனைத்திலும் தோல்வியைத் தழுவியது.

தோ்தலில் மக்கள் வழங்கிய தீா்ப்பை ஏற்றுக் கொள்வதாகத் தெரிவித்த மாநில முதல்வா் ஜெய்ராம் தாக்குா், தனது பதவியை ராஜிநாமா செய்தாா். அதற்கான கடிதத்தை மாநில ஆளுநா் ராஜேந்திர விஸ்வநாத் அா்லேகரிடம் அவா் வழங்கினாா். அவரது ராஜிநாமா ஏற்கப்பட்டதாக ஆளுநா் மாளிகை தெரிவித்துள்ளது.

நேற்று வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியான நிலையில், ஒவ்வொரு கட்சியும் பெற்ற வாக்கு விகிதங்களும் வெளியாகின. அதன்படி, காங்கிரஸ் கட்சி 43.9 சதவீத வாக்குகளையும், பாஜக 43 சதவீத வாக்குகளையும், ஆம் ஆத்மி 1.1 சதவீத வாக்குகளையும் பெற்றுள்ளது.

43.9 வாக்குகளுடன் காங்கிரஸ் கட்சி 40 இடங்களை வென்றுள்ளது. ஆனால், அதே 43 சதவீத வாக்குகளைப் பெற்றிருக்கும் பாஜகவோ வெறும் 25 இடங்களைத்தான் பிடித்திருக்கிறது. பெரும்பாலான தொகுதிகளில், மிகக் குறைந்த வாக்குவித்தியாசத்தில்தான் பாஜக தோல்வியைத் தழுவியிருக்கிறது. 

அதேவேளையில், கடந்த சட்டப்பேரவைத் தேர்தலைக் காட்டிலும் காங்கிரஸ் கட்சி பெற்ற வாக்கு விகிதம் தற்போது கணிசமாக அதிகரித்துள்ளது.

பாஜகவும், காங்கிரஸ் கட்சியும் 68 தொகுதிகளிலும் போட்டியிட்டன. ஆம் ஆத்மி 67 இடங்களில் போட்டியிட்ட போதிலும், ஹிமாசலில் தனது வெற்றிக் கணக்கை ஆம் ஆத்மியால் தொடங்க முடியவில்லை.

நோட்டாவுக்கு 0.59 சதவீத வாக்குகள் கிடைத்துள்ளன. ஒரு சதவீதத்துக்கும் குறைவான வாக்குகளை அதிகம் பெற்றதால், ஹிமாசலில் காங்கிரஸ் ஆட்சியைப் பிடித்துள்ளது. 1985ஆம் ஆண்டுக்குப் பிறகு, ஹிமாசலில், ஆளும் கட்சி ஒன்று சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்றதாக சரித்திரமே இல்லை. இந்த வரலாறையும் மக்கள் காப்பாற்றியிருக்கிறார்கள் என்றுதான் சொல்ல வேண்டும்.

முதல்வர் வேட்பாளரே தோல்வி
ஹிமாசலில் காங்கிரஸ் வெற்றி பெற்றுள்ள நிலையில், அங்கு புதிய முதல்வராகப் பொறுப்பேற்கப் போவது யாா்? என்ற எதிா்பாா்ப்பு எழுந்துள்ளது. 

முதல்வராக வாய்ப்பிருப்பதாகக் கருதப்பட்ட ஆஷா குமாரி 9,918 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளாா். அவா் ஏற்கெனவே 6 முறை எம்எல்ஏ-வாக இருந்துள்ளாா்.

தோ்தல் முடிவுகள் முழுவதும் வெளியானவுடன் காங்கிரஸ் எம்எல்ஏ-க்களின் கூட்டம் நடைபெறும் என மாநில காங்கிரஸ் பொறுப்பாளா் ராஜீவ் சுக்லா தெரிவித்துள்ளாா். அக்கூட்டத்தில் முதல்வரைத் தோ்ந்தெடுக்கும் அதிகாரத்தை கட்சியின் தலைவருக்கு வழங்க தீா்மானம் நிறைவேற்றப்படும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

அண்மையில் நடைபெற்ற பல மாநில பேரவைத் தோ்தல்களில் அக்கட்சி தோல்வியைச் சந்தித்தது. 2024-ஆம் ஆண்டில் மக்களவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தொண்டா்களை ஊக்கப்படுத்த ஹிமாசல பிரதேச வெற்றி உதவும் எனக் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

குதிரைபேரம்.. 
ஹிமாசலில் பாஜக குதிரைபேரத்தில் ஈடுபட வாய்ப்புள்ளதாகவும் காங்கிரஸ் குற்றஞ்சாட்டியுள்ளது. அதன் காரணமாக தோ்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் எம்எல்ஏ-க்களை பாதுகாக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

2017 தேர்தல் எப்படி?
பாஜக 44 இடங்களில் வென்று ஆட்சியைப் பிடித்தது. காங்கிரஸ் 21 தொகுதிகளில்தான் வென்றது.  அப்போது பாஜக பெற்ற வாக்குகள் 48.8 சதவீதம், காங்கிரஸ் 41.7 சதவீத வாக்குகள் என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.