பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக கள்ளச்சாராய மரணங்கள்: தேஜஸ்வி

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நிகழ்வதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக கள்ளச்சாராய மரணங்கள்: தேஜஸ்வி
பாஜக ஆளும் மாநிலங்களில்தான் அதிக கள்ளச்சாராய மரணங்கள்: தேஜஸ்வி
Published on
Updated on
1 min read

பாஜக ஆளும் மாநிலங்களில்தான் கள்ளச்சாராய மரணங்கள் அதிகம் நிகழ்வதாக பிகார் துணை முதல்வர் தேஜஸ்வி யாதவ் தெரிவித்துள்ளார். 

இதுகுறித்து  துணை முதல்வர் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

கள்ளச்சாராயம் குடித்து இறந்தவர்களின் எண்ணிக்கையில் மத்தியப் பிரதேசம் மற்றும் கர்நாடகா முதலிடத்தில் இருப்பதாகவும், குஜராத் மாநிலம் பிகாரை விட மோசமாக  உள்ளதாகவும் கூறினார். 

2016 மற்றும் 2020க்கு இடையில், மத்தியப் பிரதேசத்தில் அதிகபட்சமாக 1,214 கள்ளச் சாராய இறப்புகள் ஏற்பட்டுள்ளதாக அமைச்சர் என்சிஆர்பி மேற்கோள் காட்டினார், அதைத் தொடர்ந்து கர்நாடகாவில் 909ஆக உள்ளது. 

இரு மாநிலங்களிலும் பாஜக ஆட்சி நடக்கிறது. பாஜக ஆளும் மற்றொரு மாநிலமான ஹரியாணா நான்காவது இடத்தில் உள்ளது.

பிரதமர் வசிக்கும் குஜராத்தில் கூட, கள்ளச்சாராய இறப்புகளின் எண்ணிக்கை 50 ஆகவும், பிகாரில் இது 21 ஆகவும் இருப்பதாக அவர் கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com