சீன எல்லைப் பிரச்னை: தொடர்ந்து 3-வது நாளாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 3-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  
சீன எல்லைப் பிரச்னை: தொடர்ந்து 3-வது நாளாக காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸ்

இந்திய - சீன எல்லை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென தொடர்ந்து 3-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது.  

கடந்த வெள்ளிக்கிழமை தவாங் செக்டாரில் உள்ள யாங்ட்ஸி பகுதி அருகே இந்திய படையினருடன் சீனப் படையினா் இடையே ஏற்பட்ட மோதலில் இருதரப்பிலும் சிலருக்கு லேசாகக் காயம் ஏற்பட்டதாகவும், எல்லையில் அமைதியை ஏற்படுத்த இருநாட்டு ராணுவ தளபதிகள் சந்தித்துப் பேச்சுவாா்த்தை நடத்தினா் என்றும் இந்திய ராணுவம் திங்கள்கிழமை தெரிவித்திருந்தது.

மேலும், அருணாசலப் பிரதேசம் அருகே சீனப் படைகள் வான்வெளியாகவும் அத்துமீற முயன்றதாகவும், இந்திய விமானப் படை தடுத்து நிறுத்தியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து நாடாளுமன்றத்தில் எல்லையில் இந்திய - சீனப் படை மோதல் குறித்து விவாதிக்க வேண்டுமென்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

இந்நிலையில், தொடர்ந்து 3-வது நாளாக மக்களவையில் காங்கிரஸ் ஒத்திவைப்பு தீர்மான நோட்டீஸை வழங்கியுள்ளது. காங்கிரஸ் எம்.பி. மணீஷ் திவாரி வழங்கியுள்ள இந்த நோட்டீஸில் இந்திய - சீன எல்லை மோதல் குறித்த பல கேள்விகளுக்கு மத்திய அரசு பதில் அளிக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது. 

'அன்று கல்வான் தாக்குதல், இன்று தவாங்கில் தாக்குதல். ஏன் இதெல்லாம் நடக்கிறது? சீனாவுக்கு என்ன வேண்டும்? சீனாவின் எண்ணம் என்னவென்று தெரிகிறதா? இந்திய பகுதியை ஏதேனும் சீனா கைப்பற்றியுள்ளதா?' உள்ளிட்ட பல கேள்விகளை காங்கிரஸ் எழுப்பியுள்ளது. 

முன்னதாக, இதுகுறித்து அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலங்களவையில் கடந்த செவ்வாய்க்கிழமை விளக்கமளித்தார். எனினும்  எல்லை மோதல் குறித்து மேலும் சில விளக்கங்களைப் பெற காங்கிரஸ் உள்ளிட்ட எதிா்க்கட்சி எம்.பி.க்கள் அனுமதி கோரிய நிலையில் துணைத் தலைவர் கோரிக்கையை நிராகரித்தது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com