
கோப்புப்படம்
பெட்ரோல் விலை உயர்வு குறித்த மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரியின் விளக்கம் போதுமானதாக இல்லை என்று கூறி மக்களவையில் எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. வருகிற டிசம்பர் 29 வரை 17 அமர்வுகளாக நடைபெறவுள்ளது.
இதில் நாட்டில் உள்ள பல்வேறு பிரச்னைகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பி வருகின்றன.
அந்தவகையில், இந்திய - சீன எல்லை பிரச்னை குறித்து விவாதிக்க வேண்டும், மத்திய அரசு விளக்கமளிக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
இந்நிலையில் நாட்டில் பெட்ரோல் விலை உயர்வு குறித்து மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விளக்கமளித்தார். அப்போது அவரது விளக்கம் திருப்திகரமாக இல்லை என்று கூறி காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் வெளிநடப்பு செய்தன.