தலித், நாட்டின் முதல் குடிமகனாவார் என்று நினைத்ததுண்டா?

நாட்டில் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என நினைத்ததுண்டா என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 
ஜெ.பி. நட்டா (கோப்புப் படம்)
ஜெ.பி. நட்டா (கோப்புப் படம்)

நாட்டில் முதல் குடிமகனான குடியரசுத் தலைவர் பதவிக்கு பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் பதவியேற்பார் என நினைத்ததுண்டா? என பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கேள்வி எழுப்பியுள்ளார். 

தெலங்கானாவில் கட்சி சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பாஜக தேசிய தலைவர் ஜெ.பி. நட்டா கலந்துகொண்டார். அப்போது தொண்டர்கள் மத்தியில் பேசிய அவர், 

அனைவரையும் ஒன்றிணைத்து செயல்படும் வகையில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையின் கீழ் இயங்கும் அரசின் செயல்பாடுகள் உள்ளன. பிற்படுத்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் நாட்டின் முதல் குடிமகனாக மாறுவார் என யாராவது நினைத்ததுண்டா? ஆனால், அதனை மோடி அரசு செயல்படுத்தியது. 

தெலங்கானா செழிப்பான மாநிலம் என கே.சந்திரசேகர ராவ் தொடர்ந்து கூறி வருகிறார். ஆனால், உண்மையில் தெலங்கானா வறுமையான மாநிலம்தான். இன்றும் தெலங்கானா மாநிலம் கடனில்தான் உள்ளது எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com