ஷ்ரத்தா கொலையில் முக்கிய திருப்பம்: நிம்மதி பெருமூச்சு விடும் காவல்துறை

தில்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுளாக்கி வீசப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, டிஎன்ஏ சோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.
ஷ்ரத்தா கொலையில் முக்கிய திருப்பம்: நிம்மதி பெருமூச்சு விடும் காவல்துறை
ஷ்ரத்தா கொலையில் முக்கிய திருப்பம்: நிம்மதி பெருமூச்சு விடும் காவல்துறை

புது தில்லி: தில்லியில் கொலை செய்யப்பட்டு 35 துண்டுளாக்கி வீசப்பட்ட ஷ்ரத்தா வாக்கர் கொலையில் முக்கிய திருப்பமாக, டிஎன்ஏ சோதனை மற்றும் உண்மை கண்டறியும் சோதனை முடிவுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.

ஷ்ரத்தா வாக்கரின் உடல் பாகங்களைத் தேடிய காவல்துறையினர், தில்லியின் பல்வேறு பகுதிகளிலிருந்து இதுவரை 13 எலும்புத் துண்டுகளைக் கண்டறிந்து ஆய்வுக்கு உள்படுத்தினர்.

அந்த எலும்புத் துண்டுகளின் டிஎன்ஏவும், ஷ்ரத்தாவின் தந்தையின் டிஎன்ஏவும் சோதனைக்கு உள்படுத்தப்பட்டிருந்தது. இதில், மெஹ்ரௌலி வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புத் துண்டின் டிஎன்ஏ, ஷ்ரத்தா வாக்கரின் டிஎன்ஏவுடன் ஒத்துப்போவதாக காவல்துறையினருக்கு மருத்துவ அறிக்கை கிடைக்கப்பெற்றுள்ளது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த 28 வயதாகும் ஆஃப்தாப் பூனாலாவாலாவும், ஷ்ரத்தா வாக்கரும் (26) திருமணமாகாமல் சோ்ந்து வாழ்ந்து வந்தனா். 

இந்த நிலையில்,ஷ்ரத்தாவை கழுத்தை நெரித்துக் கொலை செய்து, அவரது உடலை 35 துண்டுகளாக வெட்டி தெற்கு தில்லியின் மெஹ்ரோலியில் உள்ள தனது வீட்டில் சுமாா் மூன்று வாரங்கள் குளிா்பதனப் பெட்டியில் வைத்திருந்தது, பின்னா் அவற்றை தில்லியில் பல்வேறு இடங்களில் வீசியதாகவும் ஆஃப்தாப் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இந்த வழக்கில், ஷ்ரத்தா கொலை செய்யப்பட்டார் என்பதை நிரூபிப்பதே காவல்துறையினருக்கு கடும் சவாலாக அமைந்திருந்தது. இந்த நிலையில்தான், வனப்பகுதியில் கண்டெடுக்கப்பட்ட ஒரு எலும்புத் துண்டின் மரபணு ஷ்ரத்தாவின் தந்தையின் மரபணுவுடன் ஒத்துப்போவது உறுதி செய்யப்பட்டுள்ளது.

 இதற்கிடையே, ஆஃப்தாப்பிடம் செய்யப்பட்ட உண்மை கண்டறியும் சோதனையின் இறுதி அறிக்கையும் காவல்துறையிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

எனவே, ஷ்ரத்தா வாக்கரைக் கொன்று, அவரது உடல்பாகங்களை தில்லியின் பல்வேறு பகுதிகளிலும் ஆஃப்தாப் வீசினால் என்பதை உறுதி செய்யும் வகையில், இந்த மரபணு சோதனை மிகப்பெரிய சாட்சியமாக அமைந்திருப்பதால், காவல்துறையினர் நிம்மதி அடைந்திருக்கலாம் என்று கருதப்படுகிறது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com