ஆணும் பெண்ணும் சேர்ந்து அமரக் கூடாது! தடை விதித்த வழிபாட்டுத் தலம்

மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதி அறிவிப்பு
ஜாமியா மஸ்ஜித் மசூதி (கோப்புப் படம்)
ஜாமியா மஸ்ஜித் மசூதி (கோப்புப் படம்)


ஸ்ரீநகர்: வரலாற்றுப் புகழ் பெற்ற ஜாமியா மஸ்ஜித் மசூதியில் ஆணும் பெண்ணும்     சேர்ந்து அமரக் கூடாது என உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் மசூதி வளாகத்தில் புகைப்படம் எடுக்கவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. 

இது தொடர்பாக மத்திய ஜாமியா மஸ்ஜித்தின் அஞ்சுமன் அக்வாஃப் விடுத்துள்ள அறிக்கையில், மசூதி வளாகத்தில் புகைப்படக் கருவிகள் எடுத்து வருவதற்கு அனுமதியில்லை எனக் குறிப்பிட்டுள்ளார். 

வளாகத்தில் புகைப்படக் கருவிகளைக் கொண்டு எதையும் புகைப்படம் எடுக்கக்கூடாது. மேலும், வளாகத்திலுள்ள படங்களை புகைப்படம் எடுக்கவும் அனுமதியில்லை. அவ்வாறு கருவிகளைக் கொண்டுவருபவர்கள் வாயிலிலேயே நிறுத்தப்படுவார்கள். 

அதேபோன்று உணவுப் பொருள்களை மசூதி வளாகத்தில் எடுத்துவரவும் தடை விதிக்கப்படுகிறது. மதிய உணவு, நொறுக்குத் தீனி என எதுவும் எடுத்துவரக் கூடாது. 

மசூதியினுள் வரும் பெண்கள் அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட பகுதிகளில் மட்டுமே வர வேண்டும். ஆண்களுடன் அமரக் கூடாது. 

14ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த மசூதி நிர்வாகம் விதித்துள்ள கட்டுப்பாடுகளை கண்காணிக்க மசூதி பாதுகாப்பு அதிகாரிகளுக்கு அறிவுறுத்துகிறது என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com