
ஆர்ஜென்டீனா கால்பந்து அணிக்கும் எஸ்பிஐ வங்கிக்கும் தொடர்பு
ஆர்ஜென்டீனா - பிரான்ஸ் அணிகளுக்கு இடையிலான இறுதிப்போட்டியையொட்டி எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் படங்கள் டிவிட்டரில் வைரலாகி வருகின்றன.
அதாவது, ஆர்ஜென்டீனா அணியின் ஜெர்ஸி நிறமும், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தகமும் ஒரே மாதிரியான நிறங்கள் மற்றும் தோற்றத்தைக் கொண்டுள்ளன.
இதனால் இந்தியர்கள் பலரும் எஸ்பிஐ வங்கியின் கணக்குப் புத்தகத்தின் அட்டைப் படத்தை சுட்டுரையில் பகிர்ந்து கேலி செய்து வருகின்றனர்.
படிக்க | முதல் தளத்திலிருந்து ஜன்னல் வழியாக தூக்கி வீசப்பட்ட மாணவி; ஆசிரியை கைது
உலகக் கோப்பை கால்பந்து போட்டிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதால், உலக அளவில் கால்பந்து போட்டி மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது.
மெஸ்ஸியினுடைய ஆர்ஜென்டீனா அணியும், பிரான்ஸ் அணியும் இறுதிப்போட்டியில் மோதுகின்றன. 35 வயது மெஸ்ஸிக்கு இது கடைசி உலகக் கோப்பை என்பதால், கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் அவர் உள்ளார். இதனால் இந்த போட்டிகள் மீதான சுவாரசியம் அதிகரித்துள்ளது.
இந்நிலையில், ஆர்ஜென்டீனா கால்பந்து அணியையும், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தகத்தின் அட்டையையும் ஒப்பிட்டு பலர் சுட்டுரையில் படங்களைப் பதிவேற்றி வருகின்றனர். இதனால் உலகக்கோப்பை கால்பந்து ஹேஷ்டேக்கில், எஸ்பிஐ வங்கி கணக்குப் புத்தக அட்டை வைரலாகி வருகிறது.
படிக்க | ''தோற்றால் பரவாயில்லை''.. மனைவியிடம் ரூ.10,000 கடன் வாங்கித் தொடங்கப்பட்ட இன்ஃபோசிஸ்
எஸ்பிஐ வங்கிக் கணக்குப் புத்தகத்தின் முகப்பு அட்டையின் நிறமும், ஆர்ஜென்டீனா அணியின் கொடி மற்றும் ஜெர்ஸியின் நிறமும் ஒரே மாதிரியாக உள்ளதால், டிவிட்டரில் அவ்வாறு பகிரப்படுகிறது.
டிவிட்டர் பயனாளர் ஒருவர், இந்தியர்கள் ஆர்ஜென்டீனா அணியை ஏன் அதிக அளவில் உற்சாகப்படுத்துகின்றனர் என்று இப்போதுதான் புரிகிறது என கேலியாக கருத்து பதிவிட்டுள்ளார்.
Reason why Indians support Argentina
Indians feel if Argentina loose they will loose all their money
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...