கங்கை ஆற்றில் படகு கவிழ்ந்து குழந்தைகள், பெண்கள் உள்பட 14 பேர் பலி!சென்னை சுற்றுக் குழாய் திட்டத்துக்கு முதல்வா் விஜய் இன்று அடிக்கல் நாட்டுகிறார்!இன்றும் நாளையும் 4 மாவட்டங்களில் பலத்த மழைக்கு வாய்ப்புஇன்று 4-ஆவது டி20: தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியாகாஞ்சிபுரத்தில் சிறந்த புற்றுநோய் சிகிச்சை மையத்தை முதல்வர் விஜய் திறந்து வைக்கிறார்!

உ.பி.யில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் தீ விபத்து: 3 பேர் பலி, 2 பேர் காயம்

உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள். 

கோப்புப்படம்

Published On :

உத்தரப் பிரதேசத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் 3 பேர் பலியானார்கள். 

உத்தரப் பிரதேச மாநிலம் கான்பூர் மாவட்டத்தில் சைக்கிள் சீட் தயாரிக்கும் தொழிற்சாலை இயங்கி வருகிறது. இந்த தொழிற்சாலையில் இன்று அதிகாலை 4.30 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. பிளாஸ்டிக் துகள்கள் இருந்ததால் தீ வேகமாக பரவியது.

தகவல் அறிந்து நிகழ்விடத்துக்கு விரைந்த தீயணைப்புத் துறையினர் தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். 

இருப்பினும் இந்த சம்பவத்தில் 3 பேர் பலியானார்கள். மேலும் 2 பேர் காயமடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தலைமை தீயணைப்பு அதிகாரி தீபக் ஷர்மா கூறுகையில், பாதுகாப்பு உபகரணங்களுக்கு எந்த அனுமதியும் இல்லாமல் தொழிற்சாலை சட்டவிரோதமாக இயங்கி வந்திருக்கிறது.

இந்த தொழிற்சாலைக்குள் எல்பிஜி சிலிண்டர்களும் இருந்தன. அவற்றில் ஏதேனும் வெடித்திருந்தால் பெரிய அளவு சம்பவம் நிகழ்ந்திருக்கும். தொழிற்சாலை உரிமையாளர் மீது எஃப்ஐஆர் நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.