ஷாருக்கான் பாடலுக்கு கையில் கத்தியை அசைத்துக்கொண்டு நடனமாடிய 5 பேரை இந்தூரில் போலீசார் சனிக்கிழமை கைது செய்தனர்.
மத்திய பிரதேச மாநிலம், இந்தூரில் நேற்று ஒருவரின் பிறந்த நாள் கொண்டாட்டத்தின்போது ஷாருக்கானின் 'திரிமூர்த்தி' படத்திலிருந்து 'போல் போலே போல்' எனும் பாடல் ஒலித்திருக்கிறது. அப்போது அப்பாடலுக்கு அங்கிருந்த சிலர் தங்கள் கைகளில் கத்தியை அசைத்துக்கொண்டு நடனமாடியுள்ளனர்.
இந்த கத்தியின் நீளம் சுமார் ஒன்றரை அடி எனக் கூறப்படுகிறது.
மேலும் இந்த விடியோ இணையதளங்களில் வைரலானது. இதனைக் கண்ட போலீசார் அதிரடி நடவடிக்கையில் இறங்கினர். அதன்பேரில் 5 பேரை கைது செய்து அவர்கள் மீது ஆயுத சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். கைதானவர்களில் இருவர் சிறார்கள் என போலீசார் தெரிவித்தனர்.
இதையும் படிக்க- சிலியில் காட்டுத்தீ: 7 ஆயிரம் ஹெக்டேர் காடுகள் எரிந்து நாசம்
இதுகுறித்து காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது, வெள்ளிக்கிழமை, பிறந்தநாள் விழாவை கொண்டாடும் ஐந்து இளைஞர்கள் கையில் கத்தியுடன் நடனமாடும் விடியோ போலீசாருக்கு கிடைத்தது. அவர்கள் மீது ஆயுதச்சட்டம் பிரிவு 25ன் கீழ் போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். அவர்களில் இருவர் சிறார்கள்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

சித்ரா பௌர்ணமி: சதுரகிரியில் குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள்!

எஸ்பிஐ வங்கியில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

கள்ளழகர் தீர்த்தவாரி வைபவ உற்சவம்!

சென்னையில் வணிக சிலிண்டர் விலை ரூ.3,237! அப்போ ஒரு டீ விலை?
வீடியோக்கள்

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

Kara Movie Review | Dhanush - Vignesh Raja கூட்டணி வெல்லுமா? | Dinamani Talkies
இணையதளச் செய்திப் பிரிவு
குடிநீர் குழாய் வேண்டாம்!! ஊற்றுத்தண்ணீரை விரும்பும் கிராம மக்கள்! | Pudukottai
இணையதளச் செய்திப் பிரிவு


