ராகுல் காந்திக்கு இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை: பாஜக

காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை என விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். 
அனுராக் தாக்குர் (கோப்புப் படம்)
அனுராக் தாக்குர் (கோப்புப் படம்)

காங்கிரஸ் கட்சிக்கும், ராகுல் காந்திக்கும் இந்திய ராணுவத்தின் மீது நம்பிக்கையில்லை என விளையாட்டு, இளைஞர் நலன் மற்றும் ஒலிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் விமர்சித்துள்ளார். 

இது நேருவின் இந்தியா அல்ல, சீன அரசு போருக்குத் தயாராகி வருகிறது. ஆனால் இந்திய அரசு தூங்குகிறது என காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி சமீபத்தில் விமர்சித்திருந்தார். 

அதற்கு பதிலளிக்கும் விதமாக பாஜக மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் பதிலளித்துள்ளார். தில்லியில் அனுராக் பேசியதாவது,

இந்தியா - சீனா - பூடான் எல்லையிலுள்ள டோக்லான் பகுதியில் அத்துமீறி நுழைந்த சீன வீரர்களை இந்திய வீரர்கள் தடுத்து நிறுத்தினர். அவர்கள் எல்லைப் பகுதியில் ஆயுதங்களைக் குவித்தபோது, நம் வீரர்கள் உறுதியுடன் எதிர்த்து நின்றனர். ஆனால் ராகுல் காந்தி அந்த சமயம் சீன அதிகாரிகளை சந்தித்துப் பேசிக்கொண்டிருந்தார்.

இந்திய ராணுவத்தினர் சர்ஜிக்கல் ஸ்ட்ரைக் நடத்தும்போது கூட ராகுல் காந்தி அதன் மீது கேள்வி எழுப்பினார். இது 1962ஆம் ஆண்டு இருந்த இந்தியா அல்ல, இது 2014 இந்தியா. பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இந்தியா முன்னோக்கி நகர்ந்துகொண்டுள்ளது. ஐக்கிய முற்போக்குக் கூட்டணி புல்லட் ஜாக்கெட்டுகளையும், ஜெட் விமானங்களையும் ராணுவத்திற்காக வாங்கவில்லை. ஏன் ராணுவ வீரர்களுக்காக குளிர்கால பூட்ஸைக் கூட வாங்கவில்லை. ஆனால் இதையனைத்தும் கடந்த 10 ஆண்டுகளில் செய்யப்பட்டுள்ளன. 

ராணுவத்துக்குத் தேவையான 300க்கும் அதிகமான கருவிகளை இந்தியா தற்போது தயாரிக்கிறது. இந்தியா தற்போது பாதுகாப்பு வெளிநாடுகளுக்கு உபகரணங்களை ஏற்றுமதி செய்கிறது. தற்சார்பு இந்தியா திட்டம் அதற்கான அடித்தளம். டோக்லாம் விவகாரத்தின்போதும் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் ஆகியோர் நேரில் சென்று எல்லைப் பகுதிகளை பார்வையிட்டனர் எனக் குறிப்பிட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com