கர்நாடகத்தில் சாதிமறுப்பு திருமணம் செய்த தம்பதியை பயணம் செய்ய விடாமல் தடுத்து அட்டூழியம்

கர்நாடகத்தில் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தம்பதியை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத கொடுமை நடந்துள்ளது. 
கோப்புப் படம்
கோப்புப் படம்

கர்நாடகத்தில் தக்‌ஷிண கன்னடா மாவட்டத்தில் பஜ்ரங்தள் அமைப்பைச் சேர்ந்தவர்கள் இருவேறு சமூகங்களைச் சேர்ந்த தம்பதியை பேருந்தில் பயணம் செய்ய அனுமதிக்காத கொடுமை நடந்துள்ளது. 

கர்நாடகத்தில் முதல்வர் பசவராஜ் பொம்மை தலைமையிலான பாஜக ஆட்சி செய்து வருகிறது. அம்மாநிலத்தில் கடந்த சில மாதங்களாக மதம் தொடர்பான சிக்கல் அவ்வப்போது எழுந்து வருகின்றன. இந்துக்கள் அல்லாதவர்களின் பொருள்களை வாங்கக் கூடாது, ஹிஜாப் அணிந்து கல்வி நிலையங்களுக்குள் வரக்கூடாது உள்ளிட்ட பிரச்னைகள் தேசிய அளவில் கவனம் பெற்றன. 

இந்நிலையில் தற்போது மாற்று சமூகங்களைச் சேர்ந்த இருவர் திருமணம் செய்துகொண்டதை எதிர்த்து அவர்கள் பேருந்தில் பயணம் செய்வதற்கு எதிர்ப்பு தெரிவித்த விடியோ சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது. 

அதில் மங்களூருவிலிருந்து பெங்களூரு செல்லும் பேருந்தை இடைமறித்து உள்ளே நுழைந்த பஜ்ரங்தள் அமைப்பினர் தம்பதிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர். 

தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அவர்களை காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். விசாரணைக்குப் பின் பெண்ணை அவரது குடும்பத்தினருடன் காவல்துறையினர் அனுப்பி வைத்துள்ளனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com