ராஜஸ்தானில் ஏப்ரல் 1 முதல் ரூ.500க்கு சமையல் எரிவாயு உருளை வழங்கப்படும் என்று முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
ராஜஸ்தானில் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல், வறுமைக் கோட்டின் கீழ் உள்ளவர்களுக்கும், உஜ்வாலா திட்டத்தில் பதிவு செய்யப்பட்டவர்களுக்கும் ரூ.500-க்கு சமையல் எரிவாயு உருளை வழங்க உள்ளதாக முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி முன்னிலையில் முதல்வர் அசோக் கெலாட் இன்று அறிவித்துள்ளார்.
"அடுத்த மாத பட்ஜெட்டுக்கு தயாராகி வருகிறேன். இப்போதைக்கு ஒன்று மட்டும் சொல்ல விரும்புகிறேன். உஜ்வாலா திட்டத்தின் கீழ் பிரதமர் நரேந்திர மோடி ஏழைகளுக்கு எல்பிஜி இணைப்புகள் மற்றும் எரிவாயு அடுப்புகளை வழங்குகிறார். ஆனால் சமையல் எரிவாயு உருளை காலியாக உள்ளது.
ஏனெனில் சமையல் எரிவாயு சிலிண்டர் விலைகள் இப்போது ரூ.400 முதல் ரூ.1,040 வரை உள்ளன" என்று அசோக் கெலாட் கூறினார்.
இதையும் படிக்க: நடுங்க வைக்கும் குளிர்: சந்தைகளில் குவியும் காஷ்மீர் மக்கள்
ராஜஸ்தானில் அடுத்த ஆண்டு சட்டசபை தேர்தல் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

இந்தியாவின் வரலாறு தெற்கிலிருந்தே எழுதப்பட வேண்டும்: முதல்வர் ஸ்டாலின்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |

டிராக்டர் விற்பனை 23% உயர்வு: டாபே

அபுதாபி மீதான ஈரானின் தாக்குதலில் 5 இந்தியர்கள் படுகாயம்!
வீடியோக்கள்

Podcast | ஒருவழியாக வேட்பாளர்கள் பட்டியலை வெளியிட்ட பாஜக, காங்கிரஸ்! | News & Views | E-22 |
தினமணி செய்திச் சேவை

Podcast | பாஜக, காங்கிரஸ் வேட்பாளர்கள் வருமா வராதா? | News & Views | E-21 |
தினமணி செய்திச் சேவை

பஞ்சாபை வீழ்த்தி முதல் வெற்றியைப் பெறுமா சிஎஸ்கே?
தினமணி செய்திச் சேவை

எம்.ஜி.ஆர். சிலைக்கு மாலை அணிவித்து பேச்சைத் துவங்கிய விஜய்!
இணையதளச் செய்திப் பிரிவு


