தில்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டம்: 6.3 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டத்தினால் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.
தில்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டம்: 6.3 டிகிரி செல்சியஸாக பதிவு

தில்லியில் 2-வது நாளாக கடும் பனி மூட்டத்தினால் 6.3 டிகிரி செல்சியஸாக பதிவாகியுள்ளது.

ஹிமாசல், பஞ்சாப், ஹரியானா மற்றும் வடக்கு ராஜஸ்தானில் இன்று மற்றும் அடுத்த 3-4 நாள்களுக்கு குளிர் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

பஞ்சாப், ஹரியானா, சண்டிகர், தில்லி, ஹிமாசல் மற்றும் உத்தரபிரதேசம் ஆகிய பகுதிகளில் அடுத்த மூன்று நாள்களுக்கு கடும் பனி இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த 2 நாள்களுக்கு ராஜஸ்தான், பிகார் மற்றும் மேற்கு வங்காளம் மற்றும் சிக்கிம் ஆகிய மாநிலங்களில் அடர்ந்த பனிமூட்டம் காணப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இன்றைய தில்லி வானிலை

காலை 5:30 மணிக்கு புது தில்லியில் 11.1 டிகிரி செல்சியஸ், லோடி சாலையில் 12.01 டிகிரி செல்சியஸ், பிடம்புராவில் 11.71 டிகிரி செல்சியஸ், நஜாப்கரில் 10.21 டிகிரி செல்சியஸ்  பதிவாகியுள்ளது. 

தில்லியில் இன்று காலை அடர்ந்த பனிமூட்டம் நிலவியதால், 50 மீட்டர் வரை பார்வை நிலை குறைந்து சாலைப் போக்குவரத்து மற்றும் ரயில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விமானப் போக்குவரத்து வழக்கம் போல் இருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com