ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த மாட்டோம்: காங்கிரஸ்

காங்கிரஸ் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும். ஆனால், ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்த மாட்டோம்: காங்கிரஸ்
Updated on
1 min read

காங்கிரஸ் கரோனா பாதுகாப்பு வழிமுறைகளைப் பின்பற்றும். ஆனால், ஒற்றுமை நடைப்பயணத்தை நிறுத்தாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனை காங்கிரஸின் மூத்தத் தலைவர் சல்மான் குர்ஷித் தெரிவித்தார். அண்மையில் சுகாதாரத் துறை அமைச்சர் மண்சுக் மாண்டவியா, காங்கிரஸ் சார்பில் நடத்தப்படும் ஒற்றுமை நடைப்பயணத்தில் கரோனா விதிமுறைகள் முறையாக பின்பற்றப்பட வேண்டும். அப்படி இல்லையெனில் நடைப்பயணத்தை உடனடியாக நிறுத்த வேண்டும் எனக் கடிதம் மூலம் குறிப்பிட்டிருந்தார். அதற்கு பதிலளிக்கும் விதமாக சல்மான் குர்ஷித் பேசியுள்ளார்.

பத்திரிகையாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது: காங்கிரஸ் கரோனா முன்னெச்சரிக்கை சம்பந்தமான வழிமுறைகள் அனைத்தையும் கடைப்பிடிக்கும். ஆனால், ஒற்றுமை நடைப்பயணத்தை எந்த காரணத்தைக் கொண்டும் நிறுத்தாது. ஜனநாயக நாட்டில் அனைவருக்கும் தங்களது மனதில் உள்ளதை தெரிவிக்க சுதந்திரம் உள்ளது. அரசாங்கம் எங்களது நடைப்பயணத்தை பார்த்து அச்சமடைந்துள்ளது. அதனால் தான் இது போன்ற கடிதங்களையும், உத்தரவுகளையும் பிறப்பித்து வருகிறது. கரோனா குறித்து அச்சமடையாதவர்கள் எங்களது இந்த நடைப்பயணம் குறித்து அச்சமடைந்துள்ளனர். நாங்கள் எந்த ஒரு கடிதத்தையும் ஆழமாக கவனத்தில் எடுத்துக் கொள்ள மாட்டோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com