
'துணிவு' படத்தின் மூன்றாவது பாடல் வெளியாகும் என ரசிகர்கள் எதிர்பார்த்திருந்த முன்பு பாடல் வரிகள் வெளியாகியுள்ளன.
புதிய படத்தின் பாடல்கள் லிரீக் விடியோவாக வெளியிடப்படுவது வழக்கம். எனினும் துணிவு படத்தில் பாடல் லிரீக் விடியோவுக்கு முன்னதாக படத்தில் பாடல் வரிகள் வெளியிடப்பட்டுள்ளன.
இதற்கு முன்பு இரண்டு பாடல்கள் துணிவு படத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. அந்தவகையில் தற்போது மூன்றாவது பாடலின் வரிகள் வெளியாகியுள்ளன. இசைமைப்பாளர் ஜிப்ரான் இதனை தனது சுட்டுரைப் பதிவில் வெளியிட்டுள்ளார்.
படிக்க | 10வது இடத்தில் 'பாண்டியன் ஸ்டோர்ஸ்'.. டிஆர்பி பட்டியல் வெளியீடு!
''கேங்ஸ்டா...'' என்ற தலைப்பில் பாடல் வெளிவரவுள்ளது. அஜித் ரசிகர்களுக்கு உற்சாகமளிக்கும் வகையில், தனக்கு எதிரியாக நிற்பவர்களுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் பாடல் வரிகள் அமைந்துள்ளன. இது நேரடியாக விஜய்க்கும் அவரின் ரசிகர்களுக்கும் பதிலடி கொடுக்கும் வகையில் உள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து கொண்டாடி வருகின்றனர்.
சீண்டுனா சிரிப்பவன், சுயவழி நடப்பவன், சரித்திரம் படைப்பவன் என்று பாடல் வரிகள் தொடங்குகிறது. உனக்கு சம்பவம் இருக்கு, பார் முடிவில் யார், பதிலடிதான், இனிமே பிரச்னை எதற்கு, அச்சத்த விலக்கி உச்சத்த பிடிச்சு ஊருக்குள்ள இருக்க மொத்த பயலும் எதிர்த்து நிக்கட்டும் ஐ ஆம் தி கேங்ஸ்டா என்று பாடல் வரிகள் முடிகின்றன.
படிக்க | ’வாரிசு’ இசை வெளியீட்டு விழா.. ஒரு டிக்கெட் விலை இவ்வளவா?
Lyrics of the song “Gangstaa” read it.
— Ghibran (@GhibranOfficial) December 22, 2022
Memorise it..
And enhance your hearing on 25th.#Gangstaa #கேங்ஸ்டா #Thunivu #ThunivuThirdSingle #ThunivuPongal @BoneyKapoor @BayViewProjOffl @ZeeStudios_ @Udhaystalin @BayViewProjOffl @SureshChandraa @RedGiantMovies_ pic.twitter.com/R2mnPeuDP7