
சீனாவில் கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை ஆலோசனை நடத்தவுள்ளார்.
சீனாவில் கடந்த சில வாரங்களாக கரோனா நோய்த் தொற்று வேகமாக பரவி வருகின்றது. பல்வேறு இடங்களில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், சீனாவில் பரவி வரும் பிஎஃப் 7 மற்றும் பிஎஃப் 12 என்ற ஒமைக்ரான் திரிபு வகை கரோனா குஜராத் மற்றும் ஒடிஸா மாநிலங்களில் கண்டறியப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து, நேற்று மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா முக்கிய ஆலோசனை நடத்திய பின்னர், மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் கரோனா பரிசோதனைகளை மேற்கொண்டு மாதிரிகளை மத்திய சுகாதாரத் துறைக்கு அனுப்ப அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | ஆம்புலன்ஸுக்கு வழிவிட்ட முதல்வர் ஸ்டாலின் கான்வாய்! வைரல் விடியோ
இந்நிலையில், சுகாதாரத்துறை உயர்நிலைக் குழுவுடன் பிரதமர் மோடி இன்று பிற்பகலில் ஆலோசனை நடத்தவுள்ளார். இதில், தற்போதைய நிலை குறித்தும் எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆலோசிக்கவுள்ளார்.