கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. 
கூட்டத்தொடர் நிறைவு: மக்களவை தேதி குறிப்பிடாமல் ஒத்திவைப்பு

நாடாளுமன்ற மக்களவை கூட்டத்தொடர் முன்கூட்டியே நிறைவு பெற்றது. 

நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் கடந்த டிசம்பர் 7 ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 29 ஆம் தேதி வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது. 

இந்நிலையில் கிறிஸ்துமஸ் பண்டிகை வருவதால் கூட்டத்தொடரை முன்கூட்டியே முடிக்க வேண்டும் என எம்.பி.க்கள் பலரும் கோரிக்கை வைத்திருந்தனர். 

இதையடுத்து, திட்டமிட்டதைவிட ஒரு வாரம் முன்னதாகவே இன்று (டிச.23) மக்கலவையை அவைத் தலைவர் ஓம் பிர்லா தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தார்.

எம்.பி.க்களின் கோரிக்கையினாலும் எதிர்க்கட்சிகளின் தொடர் அமளியாலும் கூட்டத்தொடர் முன்கூட்டியே ஒத்திவைக்கப்படுவதாக ஓம் பிர்லா தெரிவித்தார். 

முன்னதாக, நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரை டிசம்பர் 23-ஆம் தேதி முடிக்க மக்களவையின் வணிக ஆலோசனைக் குழு (பிஏசி) கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com