3 நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி!

நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 நாள்களில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
3 நாள்களில் 39 சர்வதேச பயணிகளுக்கு கரோனா உறுதி!

நாடு முழுவதும் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் நடத்தப்பட்ட கரோனா பரிசோதனையில் 3 நாள்களில் 39 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

சீனா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளில் கரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதையடுத்து கரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது.

தில்லி விமான நிலையத்தில் கடந்த வாரம் நான்கு சர்வதேச பயணிகளுக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், அனைத்து சர்வதேச விமான நிலையங்களிலும் கரோனா பரிசோதனை செய்ய மத்திய அரசு உத்தரவிட்டது.

அதன்படி, டிசம்பர் 24 முதல் 26 வரை மொத்தம் 3,994 சர்வதேச பயணிகளிடம் இருந்து மாதிரிகள் பெறப்பட்டது. அதில், 498 மாதிரிகளை பரிசோதனை செய்ததில் 39 மாதிரிகளில் தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அந்த மாதிரிகள் அனைத்தும் மரபணு சோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கிடையே, நாட்டில் சுகாதாரக் கட்டமைப்பின் தயாா் நிலையை உறுதி செய்யும் நோக்கில் அரசு மருத்துவமனைகளில் செவ்வாய்க்கிழமை கரோனா தடுப்பு ஒத்திகை நடைபெற்றது.

நாட்டின் பெரும்பாலான மருத்துவமனைகளில் நடைபெற்ற ஒத்திகையில், மருத்துவமனைகளில் உள்ள சுகாதார கட்டமைப்புகள், படுக்கை வசதிகள், மருத்துவ ஆக்சிஜன் வசதி கொண்ட படுக்கைகள், அவசர சிகிச்சைக்கான படுக்கைகள், செயற்கை சுவாசக் கருவி இணைக்கப்பட்டுள்ள படுக்கைகள், போதிய எண்ணிக்கையிலான மருத்துவா்கள், செவிலியா்கள், சுகாதாரப் பணியாளா்கள், ஆயுஷ் மருத்துவா்கள், முன்களப் பணியாளா்கள் உள்ளிட்டவை குறித்து ஆய்வு செய்யப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com