
தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
குஜராத் மாநிலம், ஆகமதாபாதில் உள்ள யு.என். மேத்தா இதய நோய் சிகிச்சை மற்றும் ஆராய்ச்சி மையத்தில் அவா் புதன்கிழமை அனுமதிக்கப்பட்டாா். பிரதமா் மோடி அவரை நேரில் சந்தித்து நலம் விசாரித்தாா். சுமாா் ஒரு மணி நேரம் மருத்துவமனையில் இருந்து அவா் மருத்துவா்களிடம் தாயாரின் உடல்நிலை குறித்து கேட்டறிந்தாா்.
இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடியின் தாயார் ஹீராபென் மோடி வெள்ளிக்கிழமை அதிகாலை உடல்நலக் குறைவால் மருத்துவமனையில் காலமானார்.
இதையடுத்து ஆகமதாபாத் விரைந்து வந்த நரேந்திர மோடி, காந்தி நகரில் உள்ள இல்லத்தில் தாயாரின் உடலுக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.
இதையடுத்து ஹீராபென் மோடியின் இறுதி ஊர்வலம் தொடங்கியது. தாயார் ஹீராபென் உடலை தோளில் சுமந்து சென்று இறுதிச்சடங்கில் கலந்து கொண்டுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி.
தற்போது இறுதிச்சடங்கு நடைபெற்று வருகிறது.