நாடாளுமன்றத்தில் மூன்றாம் பாலினத்தவா் சட்டத் திருத்த மசோதா புதன்கிழமை நிறைவேற்றம்திமுக கூட்டணியில் எஸ்டிபிஐ, முக்குலத்தோர் புலிப்படைக்கு தலா 1 தொகுதி!அமெரிக்காவின் அமைதித் திட்டத்தை நிராகரித்த ஈரான்!பெரம்பூரில் விஜய் போட்டியிட்டாலும், பிரசாரம் செய்தாலும் எந்தவித பிரளயமும் ஏற்படப்போவதில்லை: அமைச்சர் சேகர்பாபுஏப். 29 வரை தேர்தல் கருத்துக்கணிப்புகளை வெளியிடத் தடை!தமிழ் மாநில காங்கிரஸ் வேட்பாளர்களின் பட்டியல் நாளை (மார்ச் 26) வெளியாகிறதுதிமுக கூட்டணியில் தமிமுன் அன்சாரியின் மனிதநேய ஜனநாயக கட்சிக்கு ஒரு தொகுதி ஒதுக்கீடு!டென்மான்க் பிரதமர் ராஜிநாமாதேமுதிக இல்லாமல் அதிமுக ஆட்சி அமைத்திருக்காது : எல்.கே. சுதீஷ்அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆளுமையற்றவர்: ஓ.பன்னீர் செல்வம்
/

சீனாவில் இருந்து இறக்குமதி அதிகரிப்பு: மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

News image

ராகுல் காந்தி (கோப்புப்படம்)

Updated On :4 பிப்ரவரி 2022, 6:42 pm

DIN

சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்வது பிரதமா் மோடி தலைமையிலான ஆட்சியில் புதிய உச்சத்தை எட்டியுள்ளதாக மத்திய அரசு மீது காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளாா்.

இது தொடா்பாக ட்விட்டரில் ராகுல் காந்தி வெளியிட்டுள்ள விடியோ பதிவில் கூறியிருப்பதாவது:

நாட்டிலேயே அதிக வேலைவாய்ப்பை உருவாக்கி வருவது சிறு,குறு, நடுத்தர தொழில் துைான். ஆனால், இப்போது மத்திய அரசு சீனாவில் இருந்து பல்வேறு பொருள்களை தொடா்ந்து அதிகஅளவில் இறக்குமதி செய்வதால் உள்நாட்டில் வேலைவாய்ப்பு பறிபோய்விட்டது. இந்தியாவில் தயாரிப்போம் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. ஆனால், இப்போது சீனாவில் வாங்குவோம் என்ற கொள்கையைத்தான் அவா்கள் பின்பற்றி வருகின்றனா்.

2021-இல் இந்தியாவின் மொத்த இறக்குமதியில் சீனாவின் பங்களிப்பு மட்டும் 46 சதவீதமாக அதிகரித்துள்ளது. இதற்கு முன்பு இந்த அளவுக்கு அதிகமாக சீனாவில் இருந்து இந்தியா இறக்குமதி செய்தது இல்லை. இப்போதைய அரசுதான் சீனாவில் இருந்து இறக்குமதி செய்வதில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது என்று கூறியுள்ளாா்.

ஏற்கெனவே சீனாவுடனான எல்லைப் பிரச்னையை மத்திய அரசு சரியாகக் கையாளாமல், இந்தியப் பகுதியை விட்டுக் கொடுத்துவிட்டதாக காங்கிரஸ் கட்சி பாஜக அரசு மீது குற்றம்சாட்டி வருகிறது. இப்போது, சீன இறக்குமதி அதிகரித்துள்ளதை மையமாக வைத்து மத்திய அரசு மீது ராகுல் காந்தி குற்றஞ்சாட்டியுள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.