உத்தரப் பிரதேச மாநிலத்தில் தேர்தல் களம் ஏற்கனவே சூடுபிடித்திருக்கும் நிலையில், சட்டப்பேரவை தேர்தலுக்கான தேர்தல் அறிக்கையை பாஜக இன்று வெளியிடப்பட்டுள்ளது.
பாஜக வெளியிட்ட தேர்தல் அறிக்கையில்,
• 60 வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் செய்ய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக பாஜக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
• மீரட், ராம்பூர், கான்பூர் உள்ளிட்ட இடங்களில் பயங்கரவாத எதிர்ப்பு கமாண்டோ படைகள் அமைக்கப்படும்.
• மூத்த குடிமக்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஓய்வூதியம் ரூ.1,500 ஆக உயர்த்தப்படும்.
• ஹோலி, தீபாவளி ஆகிய பண்டிகைகளுக்கு 2 கேஸ் சிலிண்டர்கள் இலவசமாக வழங்கப்படும் என பாஜக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.