
ஹரியாணாவில் 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு நாளை மறுநாள்(பிப்.10) முதல் பள்ளிகள் மீண்டும் திறக்கப்பட உள்ளது.
ஹரியாணா அரசு வெளியிட்டுள்ள சுற்றறிக்கையின் படி,
மாநிலத்தில் கரோனா நோய்த் தொற்று குறைந்துவருவதையடுத்து, கரோனா வழிகாட்டுதல் நெறிமுறைகளின் படி நாளை மறுநாள்(பிப்.10) பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளன.
ஒன்று முதல் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நேரடி வகுப்புகள் தொடங்கவுள்ளன அதேசமயம் ஆன்லைன் முறையில் வகுப்புகளும் தொடரப்படுகின்றன.
முன்னதாக, 10,11 மற்றும் 12 வகுப்பு மாணவர்களுக்கு கடந்த பிப்.1 ஆம் தேதி முதல் பள்ளிகள் தொடங்கப்பட்டது.
மேலும், தடுப்பூசி செலுத்திக் கொண்ட 15-18 வயதுடைய சிறார்கள் மட்டுமே பள்ளிகளில் அனுமதிக்கப்படுவார்கள் என மாநில சுகாதாரத் துறை அமைச்சர் அனில் விஜ் முன்பு தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...