பெண்கள், குழந்தைகள் நலனுக்காக ஒதுக்கப்படும் நிர்பயா நிதி பயன்படுத்தப்படாதது குறித்து நாடாளுமன்ற நிலைக்குழு அதிருப்தி தெரிவித்துள்ளது.
கடந்த 2012ஆம் தலைநகர் தில்லியில் இளம்பெண் கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்தைத் தொடர்ந்து பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் விதமாக மத்திய அரசால் நிர்பயா நிதியம் உருவாக்கப்பட்டது.
மத்திய பெண்கள் மற்றும் குழந்தைகள் அமைச்சகத்தின் சார்பில் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கும் விதமாக நிர்பயா நிதி ஒதுக்கப்படுகிறது.
இந்நிலையில் பெண்கள், குழந்தைகளுக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவானது நிர்பயா நிதி முழுவதுமாக பயன்படுத்தப்படாதது குறித்து அதிருப்தியை வெளியிட்டுள்ளது. நாடாளுமன்ற நிலைக்குழுவின் 316ஆவது அறிக்கையின் மூலம், நிர்பயா நிதிக்காக மொத்தம் ஒதுக்கீடு செய்யப்பட்ட ரூ.9549 கோடியில் இதுவரை ரூ.4241 கோடி விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் அவற்றில் ரூ.2989 கோடி மட்டுமே செலவழிக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.
இதையும் படிக்க | உன்னாவ் தலித் பெண் பலியானது எப்படி? உடற்கூராய்வில் அதிர்ச்சி
இதுகுறித்து கவலை தெரிவித்துள்ள நாடாளுமன்ற நிலைக்குழு நிர்பயா நிதி பயன்படுத்தப்படாததற்கான காரணங்களை ஆராய அறிவுறுத்தியுள்ளது. மத்திய அரசின் சார்பில் மேற்கொள்ளப்படும் திட்டங்கள் முறையாக செயல்படுத்தப்படுவதை மாநில அரசுகள் உறுதி செய்வதில் கவனம் செலுத்த வேண்டும் என நிலைக்குழு கேட்டுக் கொண்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

நீட்.. ஆடைக்கட்டுப்பாட்டில் புதிய மாற்றம்!
குமாரராணி மீனா முத்தையா மறைவுக்கு முதல்வர் இரங்கல்!

தாத்தாவான துணை முதல்வர் டி.கே. சிவகுமார்: தேஜஸ்வி சூர்யா வாழ்த்து!

ஜன நாயகன் லீக்: 9 பேர் ஜாமின் மனு தள்ளுபடி
வீடியோக்கள்

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | "உலகக் கோப்பை ஜெயிக்க உங்களுக்கு கிளாசென் வேண்டும்" |
தினமணி செய்திச் சேவை

Dinamani வார ராசிபலன்! | May 3 முதல் 9 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு
Podcast | Exit Polls சொல்வது நடக்குமா? | News and Views | Epi - 30
தினமணி செய்திச் சேவை

