வேளச்சேரி - பரங்கிமலை இடையே பறக்கும் ரயில் சேவை: நாளை முதல் தொடக்கம்கோடைக்கால மின்தேவை: 9,000 மெகாவாட்டை கடக்கும் என எதிா்பாா்ப்புவார இறுதி விடுமுறைக்கு 865 சிறப்பு பேருந்துகள்வணிக சமையல் எரிவாயு உருளை தட்டுப்பாடு: உணவகங்களில் உணவுப் பொருள்களின் விலை உயா்வுதமிழகத்தில் மாா்ச் 15 வரை வெப்பநிலை உயர வாய்ப்புஇந்தியா, சீனா உள்பட 16 நாடுகளுக்கு எதிராக புதிய விசாரணையைத் தொடங்கிய அமெரிக்கா : நியாயமற்ற வா்த்தக நடைமுறைகளுக்கு எதிராக நடவடிக்கை
/

நாட்டில் இதுவரை 176.52 கோடி தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன: சுகாதாரத்துறை

நாட்டில் இதுவரை 176.52 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளது.  

News image
Updated On :24 பிப்ரவரி 2022, 5:56 am

DIN


நாட்டில் இதுவரை 176.52 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாகவும், கடந்த 24 மணி நேரத்தில் 30 லட்சத்துக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத்துறை இன்று அளித்துள்ள தரவுகளின்படி,

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 30,49,988 தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன. இதையடுத்து இன்று காலை 7 மணிவரை நிலவரப்படி மொத்தம் 1,76,52,31,385 கோடி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.

வயதுவாரி விவரங்கள்

Story image


கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக 30,009 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை குணமடைந்தோரின் மொத்த எண்ணிக்கை 4,22,19,896 ஆக அதிகரித்துள்ளது. இதையடுத்து குணமடைந்தோர் விகிதம் 98.46 சதவிகிதமாக அதிகரித்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.