ராஜஸ்தான்: 55 அடி ஆழ்துளை கிணற்றில் விழுந்த 4 வயது சிறுவன்: மீட்புப் பணிகள் தீவிரம்

ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் வியாழக்கிழமை நான்கு வயது குழந்தை திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.
கோப்புப் படம்.
கோப்புப் படம்.

சிகார்: ராஜஸ்தான் மாநிலம், சிகார் மாவட்டத்தில் வியாழக்கிழமை நான்கு வயது குழந்தை திறந்த ஆழ்துளைக் கிணற்றில் விழுந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினர் ஆழ்துளை கிணற்றில் விழுந்த குழந்தையை மீட்கும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

இதுகுறித்து சிகார் மாவட்ட கூடுதல் ஆட்சியர் தாரா சிங் மீனா கூறுகையில், "சிகார் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்தில் வியாழக்கிழமை காலை 55 அடி ஆழ மூடப்படாத ஆழ்துளை கிணற்றுக்குள் நான்கு வயது குழந்தை தவறி விழுந்தது தெரியவந்தது. 

இதுகுறித்து காவல்துறையினர் மற்றும் தீயணைப்புத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதும், அவர்கள் குழந்தையை மீட்கும் பணிகளில் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்" என்று தாரா சிங் மீனா கூறினார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com