தில்லி: நிகழாண்டில் 39 பேருக்கு டெங்கு பாதிப்பு

தேசியத் தலைநகர் தில்லியில் இந்தாண்டு இதுவரை 39 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது பதிவாகியுள்ளதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தில்லி: நிகழாண்டில் 39 பேருக்கு டெங்கு பாதிப்பு

தேசியத் தலைநகர் தில்லியில் இந்தாண்டு இதுவரை 39 பேருக்கு டெங்கு பாதிப்பு இருப்பது பதிவாகியுள்ளதாக மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிப்ரவரி 19-ம் தேதி வரை நகரில் 37 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

திங்கள்கிழமை வெளியிட்ட தகவலின்படி, 

இந்தாண்டு பிப்ரவரி 26-ம் தேதி வரை 39 பேருக்கு டெங்கு பரவியுள்ளன. 

ஜனவரி 1 முதல் பிப்ரவரி 26 வரையிலான காலகட்டத்தில், முந்தைய ஆண்டில் டெங்குவால் 2 பேர் பாதிக்கப்பட்டது பதிவாகியுள்ளது. அதேநேரத்தில் 2020இல் 4 பேரும், 2019இல் 2 பேரும், 2018இல் 9 பேரும், 2017-இல் 6 பேரும் பாதிக்கப்பட்டதாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கொசுக்களால் பரவும் டெங்கு நோய் பொதுவாக ஜூலை மற்றும் நவம்பா் மாதங்களில் பதிவாகும். ஆனால், இந்த முறை டிசம்பா் நடுப்பகுதி வரை நீடித்துள்ளது. 

கடந்த ஆண்டு, 9,613 பேருக்கு டெங்கு பாதிப்பு இருந்தது. இது 2015 முதல் ஒரு வருடத்தில் தேசியத் தலைநகரில் பதிவான அதிக எண்ணிக்கையாகும். மேலும், கடந்த ஆண்டு 23 இறப்புகள் பதிவாகியுள்ளன.

2021-க்கு முந்தைய ஆண்டுகளில், மொத்த டெங்கு பாதிப்பு முறையே- 4,431 (2016), 4,726 (2017), 2,798 (2018), 2,036 (2019) மற்றும் 1,072 (2020) என இருந்ததாக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

2015-ஆம் ஆண்டில், தில்லியில் டெங்கு பாதிப்பு மிக அதிகமாக இருந்தது. அந்த ஆண்டு அக்டோபா் மாதத்திலேயே பாதிப்பு எண்ணிக்கை 10,600-ஐ தாண்டியது. இது 1996-ஆம் ஆண்டுக்குப் பிறகு தேசியத் தலைநகரில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகும். 2021-இல் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்ட இறப்பு எண்ணிக்கை 10-ஆக இருந்தது. இது 2016- க்குப் பிறகு பதிவான அதிகபட்சமாகும். 

தில்லியில் 2019-இல் டெங்குவால் இரண்டு போ் உயிரிழந்தனர். இதேபோல், 2018-இல் நான்கு போ், 2017 மற்றும் 2016-இல் தலா 10 போ் உயிரிழந்துள்ளனர்.

இதற்கிடையே, இந்த ஆண்டு இதுவரை மலேரியா மற்றும் சிக்குன்குனியா பாதிப்பு எதுவும் பதிவாகவில்லை என்று மாநகராட்சி வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com