அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்விஜம்மு-காஷ்மீரில் வீட்டிற்கு வெளியே வெடித்த மர்ம பொருள் தமிழ்நாடு, புதுச்சேரியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியமைக்கும்: பியூஷ் கோயல் சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: இன்று மாலை தீர்ப்பு!
/

ஹிஜாப்: வழக்குத் தொடர்ந்த 3 மாணவிகள் பழிவாங்கப்படுகின்றனரா?

ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மூன்று முஸ்லீம் மாணவிகளை கல்வி நிலையம் பழிவாங்கும் நடவடிக்கையில் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

News image

கோப்புப் படம்

Updated On :28 பிப்ரவரி 2022, 10:37 am

DIN

ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்த விவகாரத்தில் கர்நாடக உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்த மூன்று முஸ்லீம் மாணவிகளை பழிவாங்கும் நடவடிக்கையில் கல்வி நிலையம் இறங்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

கர்நாடகத்தில் உள்ள கல்வி நிலையங்களில் முஸ்லீம் மாணவிகள் ஹிஜாப் அணிய எதிர்ப்பு தெரிவித்து கலவரம் வெடித்தது. ஏபிவிபி போன்ற ஹிந்து அமைப்பைச் சேர்ந்த மாணவ, மாணவிகள் முஸ்லீம் மாணவிகளுக்கு எதிராக போர்க்கொடி தூக்கிய நிலையில், கல்வி நிலையங்களும் ஹிஜாப் அணிந்து வரும் மாணவிகளுக்கு அனுமதி மறுத்தது.

இதனை எதிர்த்து கர்நாடக உயர்நீதிமன்றத்தில் ஆறு மாணவிகள் வழக்குத் தொடர்ந்தனர். இந்த வழக்கு தனி அமர்வு முன்பு விசாரணையில் உள்ளது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் வழக்குத் தொடர்ந்த 6 மாணவிகளில் 3 பேரை உடுப்பியிலுள்ள அரசு பியூ கல்லூரி நிர்வாகம் செய்முறைத் தேர்வுக்கு அனுமதிக்கவில்லை. அவர்களது செய்முறை கையேடை வாங்க மறுப்புத் தெரிவித்த ஆசிரியர்கள், மாணவிகள் மூன்று பேரையும் தேர்வு எழுத அனுமதிக்காமல் வெளியே நிற்கவைத்துள்ளனர்.

ஹிஜாபை கழற்றினால் மட்டுமே செய்முறைத் தேர்வு கையேடை (ரெக்கார்ட் நோட்) வாங்கிக்கொள்வதாக ஆசிரியர் கூறியதாக மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.