பாதிப்புகள் மட்டுமே அதிகரிக்கின்றன: நம்பிக்கையளிக்கும் மகாராஷ்டிர அமைச்சர்

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் வியாழக்கிழமை தெரிவித்தார்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்றின் பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிப்பதாக மாநில சுகாதாரத் துறை அமைச்சர் ராஜேஷ் தோப் வியாழக்கிழமை தெரிவித்தார்.

மகாராஷ்டிரத்தில் கடந்த சில நாள்களாக கரோனா பாதிப்பு அதிகரித்து வருகிறது. புதன்கிழமை மட்டும் 26,538 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது. 8 பேர் பலியாகினர். அதிகபட்சமாக மும்பையில் மட்டும் 15,166 பேருக்கு தொற்று பாதிப்பு இருப்பது உறுதி செய்யப்பட்டது.

இந்த நிலையில், பாதிப்பு எண்ணிக்கைகள் மட்டுமே அதிகரிப்பதாகவும், உயிரிழப்புகள் அதிகரிக்கவில்லை என்றும் அமைச்சர் தோப் தெரிவித்துள்ளார்.

இதுபற்றி அவர் கூறியது:

"பாதிப்பு எண்ணிக்கைகள் அதிகரிக்கின்றன. ஆனால், மருத்துவமனையில் அனுமதிக்கப்படும் நிலை அதிகரிக்கவில்லை. அதேசமயம், கரோனா உயிரிழப்புகளும் அதிகரிக்கவில்லை. மருத்துவ ஆக்ஸிஜன் தேவை அதிகரிக்கவில்லை."

புதன்கிழமை நிலவரப்படி மகாராஷ்டிரத்தில் 87,505 பேர் நோய்த் தொற்றுக்கான சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com