தற்போதைய சூழலில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் இல்லை என கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார்.
நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கரோனா தொற்று பரவல் அதிகரித்து வருகிறது. தொற்று பரவலைக் கட்டுப்படுத்த பகுதி நேர ஊரடங்கு, இரவு நேர ஊரடங்கு உள்ளிட்டவை அமல்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
இதையும் படிக்க | மாணவ, மாணவிகளுக்கு இலவச மடிக்கணினி: அகிலேஷ் யாதவ் வாக்குறுதி
இந்நிலையில் கரோனா தொற்று அதிகரித்துவருவதன் மத்தியில் கேரளத்தில் முழு ஊரடங்கு அமல்படுத்தும் திட்டம் தற்போது ஏதும் இல்லை என அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விளக்கமளித்துள்ளார்.
முழு ஊரடங்கை அறிவிப்பது மக்களின் வாழ்வாதாரத்தை பாதிப்படையச் செய்யும் என தெரிவித்த அமைச்சர் வீனா ஜார்ஜ் மக்கள் முன்னெச்சரிக்கையுடன் தடுப்பு நடவடிக்கைகளைப் பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதையும் படிக்க | தில்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு
வெளிநாடுகளிலிருந்து வரும் பயணிகள் மத்திய அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி தனிமைப்படுத்தப்படுவதாக வீனா ஜார்ஜ் தெரிவித்துள்ளார். கேரளத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 5000க்கும் மேற்பட்டவர்கள் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.