விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

தில்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

தில்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

News image

தில்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்தைக் கடந்தது கரோனா பாதிப்பு

Updated On :8 ஜனவரி 2022, 1:32 pm

DIN

தில்லியில் ஒரே நாளில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தலைநகர் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்துவருகிறது.

இந்நிலையில் சனிக்கிழமை வெளியிடப்பட்ட கரோனா தொற்று பாதிப்பு நிலவரப்படி புதிதாக 20,181 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் தில்லியில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 15,26,979 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் கடந்த 24 மணி நேரத்தில் 7 பேர் தொற்றால் பலியாகியுள்ளனர். இதுவரை தில்லியில் கரோனாவால் 25143 பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போது 48,178 பேர் தொற்று பாதிப்பிற்கான சிகிச்சை பெற்று வருகின்றனர். தில்லியில் கரோனாவால் பாதிக்கப்படுபவர்களின் விகிதம் 19,60 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.