காஷ்மீர், ஸ்ரீநகரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க ஜமா மசூதியில் ஈத் தொழுகை நடத்த அதிகாரிகள் தடை விதித்துள்ளனர்.
நாடு முழுவதும் ரமலான் பண்டிகை உற்சாகத்துடனும், கோலாகலத்துடன் கொண்டாடி வருகின்றனர். இஸ்லாமியர்கள் மசூதிகளுக்குச் சென்று தொழுகை நடத்தி ஒருவருக்கொருவர் வாழ்த்து பரிமாறி வருகின்றனர்.
தால் ஏரிக்கரையில் அமைந்துள்ள ஹஸ்ரத்பால் தர்காவில் இஸ்லாமியர்கள் பலர் ஒன்றுகூடி ரமலான் தொழுகையில் ஈடுபட்டனர். ஹஸ்ரத்பாலில் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் ஒன்றுகூடித் தொழுகையை நடத்தினர். இது காஷ்மீரில் உள்ள மிகப்பெரிய மசூதியாக கருதப்படுகிறது.
நகரின் நவ்ஹட்டா பகுதியில் உள்ள ஜமா மசூதியில் தொழுகைக்காக மக்கள் கூடுவதைத் தடுப்பதற்காக அப்பகுதி முழுவதும் பெருமளவிலான பாதுகாப்புப் படையினர் குவிக்கப்பட்டுள்ளனர்.
தொடர்ந்து ஏழாவது ஆண்டாக, ஜமா மசூதியில் ரமலான் தொழுகைக்கான தடை விதிக்கப்பட்டுள்ளது. இது இஸ்லாமியர்களுக்கு பெரும் வருத்தத்தைத் தரக்கூடியதாகவே மாறியுள்ளது.
இதுதொடர்பாக காஷ்மீரின் தலைமை மதகுருவான மிர்வைஸ் உமர் ஃபாரூக் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
மசூதியை பூட்டுபவர்களே ஈத் முபாரக் என்று வாழ்த்துத் தெரிவிப்பது கவலைக்குரியதாக உள்ளது.
முதல்வர் உமர் அப்துல்லா மற்றும் தேசிய மாநாட்டுக் கட்சியின் தலைவர் ஃபாரூக் அப்துல்லா ஆகியோர் ஹஸ்ரத்பாலில் தொழுகை நடத்திய முக்கிய நபர்கள் ஆவார்.
ஈத் தொழுகைக்குப் பிறகு அமெரிக்க எதிர்ப்பு மற்றும் இஸ்ரேல் எதிர்ப்புப் போராட்டங்கள் ஏற்படக்கூடும் என அதிகாரிகள் அஞ்சுவதால், நகரின் பாதுகாப்பற்ற பகுதிகளில் பாதுகாப்புப் படைகள் பெருமளவில் குவிக்கப்பட்டன.
காஷ்மீர் பள்ளத்தாக்கின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் ஈத் தொழுகையில் பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டனர். அனைத்து வயது பாலினத்தைச் சேர்ந்த இஸ்லாமியர்கள் புத்தாடை அணிந்து, மசூதிகளுக்குச் சென்று வழிபாடுகளில் ஈடுபட்டனர்.
ரமலான் மாதத்தின் நிறைவைக் குறிக்கும் வகையில், இஸ்லாமியர்கள் தங்கள் உறவினர்களையும் நண்பர்களையும் சந்தித்து, பரிசுகளையும் வாழ்த்துகளையும் பரிமாறிக்கொள்ளும் நாளாக ரம்ஜான் அனுசரிக்கப்படுகிறது.
Summary
Eid-ul-Fitr is being celebrated across Kashmir on Saturday with traditional fervour and gaiety as the largest congregation of devotees assembled at Hazratbal Shrine on the banks of Dal Lake.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரமலான்: நாமக்கல் ஈத்கா மைதானத்தில் சிறப்பு தொழுகை

புதுகையில் ஈகைப் பெருநாள் சிறப்புத் தொழுகை

ஜாமா மசூதியில் ரமலான் சிறப்புத் தொழுகை! பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்பு!
கடலூர் ஆயங்குடியில் ரமலான் சிறப்புத் தொழுகை!
விடியோக்கள்

பவர் பேட்ட க்ளிம்ஸ் விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

வெளியில் இருந்து ஆதரவு! ஆட்சியில் பங்கில்லை! கம்யூ. தலைவர்கள் பேட்டி | TVK
இணையதளச் செய்திப் பிரிவு

விஜய் முதல்வராக முடியுமா ? | TVK Vijay | TN CM | MK Stalin | Edapadi Palaniswamy
தினமணி செய்திச் சேவை

என்ன சொல்லி மிரட்டினாலும்... PM SHRI குறித்து அன்பில் மகேஸ் அட்வைஸ்
இணையதளச் செய்திப் பிரிவு

