/

மதுரை தெற்கு! எதிர்பார்ப்பில் நெசவாளர்கள்!

மதுரை தெற்குத் தொகுதி நெசவாளர்களின் எதிர்பார்ப்புகள் பற்றி..

News image

நெசவாளர்கள்

ARUNSS

Updated On :21 மார்ச் 2026, 7:00 am

ச.சந்தனக்குமார்

மதுரை: மூலப் பொருள்களின் விலை குறைப்பு, ஏற்றுமதியில் தன்னிறைவு உள்ளிட்ட தங்களது பல்வேறு கோரிக்கைகள் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே மதுரை தெற்குத் தொகுதி நெசவாளர்களின் எதிர்பார்ப்புகளாக உள்ளன.

மதுரை தெற்குத் தொகுதி முழுவதும் நகர்ப் பகுதிகளை உள்ளடக்கியவை. வண்டியூர், தெப்பகுளம் பகுதிகள், அனுப்பானடி, முனிச் சாலை, சிந்தாமணி, வாழைத் தோப்பு, செல்லூரின் சில பகுதிகள், மதிச்சி யம், வில்லாபுரத்தின் ஒரு பகுதி என மொத்தம் 24 மாநகராட்சி வார்டுகள் இந்தத் தொகுதியில் அடங்கியுள்ளன.

சௌராஷ்டிரா சமூக மக்கள் அதிகளவில் வசித்து வரும் தொகுதியாக மதுரை தெற்கு உள்ளது. இந்தத் தொகுதியில் நெசவு, அப்பளம் உற்பத்தி ஆகியவை முக்கியத் தொழில்களாக உள்ளன.

நெசவுத் தொழிலைப் பொருத்தவரை, கைத்தறி, விசைத் தறி, கால்மிதி தறி என மூன்று நிலைகளில் நடைபெறுகிறது.

இந்தத் தொழிலில் சௌராஷ்டிரா, செட்டியார் சமூக மக்கள் அதிகளவில் ஈடுபட்டு வருகின்றனர். இங்கு உற்பத்தியாகும் ஆடைகள் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படு கின்றன. இருப்பினும், உற்பத்திக்கான மூலப் பொருள்களின் விலை உயர்வு, அரசின் கடனுதவித் திட்டங்கள் செயல்படுத்தபடாமை, பணியாளர்கள் பற்றாக்குறை, தேர்தல் வாக்கு றுதிகள் நிறைவேற்றப்படாமை. இளம் தலை முறையினரிடம் கொண்டு செல்வதில் சிரமம் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் இந்தத் தொழிலில் ஈடுபடும் தொழிலாளர்கள் மிகவும் இன்னலுக்கு ஆளாகி வருவதாக வேதனை தெரிவித்தனர். நலிவடையும் நிலையில் உள்ள இந்தத் தொழிலை மீட்டெடுக்க வேண் டுமெனில் மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சலுகைகளை வழங்க வேண்டும் என நெசவா ளர்கள் எதிர்ப்பார்க்கின்றனர்.

இதுகுறித்து மதுரை சுங்குடி உற்பத்தியாளர் சங்கத்தின் முன்னாள் செயலர் ஏ.கே.ரமேஷ் கூறியதாவது, மதுரை அனுப்பானடி, சிந்தாமணி, வண்டியூர், முனிச்சாலை, காமராஜர்புரம், அவனியா புரம் பகுதிகளில் சுமார் ஆயிரத்துக்கும் மேற் பட்ட குடும்பங்கள் நெசவுத் தொழிலில் ஈடுபட்டு வருகின்றனர்.

முன்பெல்லாம் அனைத்து நெசவாளர்க ளும் கைத்தறியில் நெசவு செய்தனர். தற்போ தைய காலச் சூழலில் பெரும்பாலானோர் விசைத் தறிகள் மூலம் நெசவுப் பணியில் ஈடுபடுகின்றனர்.

மதுரை என்றாலே சுங்குடி சேலைகள்தான் மிகவும் பிரபலமானவை. இந்தச் சேலைகள் இன்றும் இயற்கை முறையில் கைத்தறியில் தான் தயாரிக்கப்படுகின்றன. எடை குறைவு. வெப்பம், குளிர் ஆகிய காலங்களுக்கு ஏற்ற சேலை என்பதால், உலகம் முழுவதும் இந்தச் சேலைகள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

உற்பத்திப் பொருள்களின் விலை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. நெசவாளர்கள் பயன்பெறும் வகையில் வண்டியூர், அனுப்பானடி, முனிச்சாலை, அவனியாபுரம், நிலையூர், கிருஷ்ணாபுரம் ஆகிய பகுதிகளில் நெசவுத் தொழிலுக்கான கூட்டுறவுச் சங்கங்கள் செயல்பட்டன.

இந்தச் சங்கங்களில் நெசவாளர்களுக்கு கடனுதவி, குறைந்த விலையில் பாவு நூல்கள் வழங்கப்பட்டன. தற்போது இந்தச் சங்கங்கள் செயல்படவில்லை. வரி விதிப்பும் அதிகமாக உள்ளது.

குறிப்பாக, மதுரை சுங்குடி சேலைகளுக்கு 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. இதை 2 சதவீதமாக குறைக்க வேண்டும் என மத்திய, மாநில அரசுகளுக்கு கோரிக்கை விடுத்துள் ளோம். அரசுக்கு வருவாய் வேண்டும் என்ப தில் மாற்றுக் கருத்து இல்லை. அதேநேரத்தில், நெசவாளர்களின் வாழ்வாதாரம் பாதிக்கக் கூடாது.

பொதுவாக, ஆடைகள் உற்பத்தி செய்வதற்கு நூல் திரித்தல், வண்ண சாயம் ஏற்றுதல், ஆடையாக வடிவமைத்தல், கஞ்சி பசை ஏற்றுதல், காயவைத்தல், தேய்த்தல் உள்ளிட்ட பணிகள் நிறைவு பெற்றால்தான் முழுமைபெறும்.

மதுரை பகுதியில் மேற்கண்ட தொழில்களை நம்பி 30 ஆயிரத்துக்கும் அதிகமான குடும்பங் கள் வசித்து வருகின்றன. அவர்களின் முழு நேரப் பணி நெசவுதான்.

இந்த நிலையில், நூல்களின் விலை உயர்வு, பணியாளர்களின் பற்றாக்குறை. கூட்டுறவுச் சங்கங்கள் செயல்படாதது, வட்டி யில்லா கடனுதவிகள் வழங்கப்படாதது உள் ளிட்ட பல்வேறு காரணிகளால் நெசவாளர்கள் கடும் பாதிப்புக்குள்ளாகி வருகின்றனர்.

நெசவுக்கான நூல்கள் மானிய விலையில் வழங்கப்படும், நெசவாளர்களின் வாழ்க்கைத் தரம் மேம்பட பல்வேறு வட்டியில்லா கடனு தவிகள் வழங்கப்படும் என தேர்தல் நேரங் களில் அறிவிப்புகளாக வெளியாகின்றன. ஆனால், நடைமுறைபடுத்தப்படுவதில்லை.

மதுரையில் உற்பத்தியாகும் ஆடைகள் தமிழகம் மட்டுமன்றி, பிற மாநிலங்களுக்கும் அனுப்பி வைக்கப்படுகின்றன. இங்கிருந்து மும்பை, கொல்கத்தா போன்ற நகரங்களுக்கு அனுப்பப்பட்டு, அங்கிருந்து சிங்கப்பூர், மலே சியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்பட தமிழர்கள் அதிகம் வாழும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது.

தற்போது, மதுரை விமான நிலையம் சர்வதேச விமான நிலையமாக தரம் உயர்த்தப்பட்டது. இதன் காரணமாக, இனி வரும் காலங்க ளில் வெளிநாட்டினர் மதுரைக்கு நேரடியாக வந்து. ஆடைகளை கொள்முதல் செய்வதற்கு வாய்ப்புள்ளது என்றார் அவர்.

கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் நெசவாளர்க ளுக்கு போதிய நிதியுதவிகள், மின் கட்டணச் சலுகைகள், மானிய விலையில் நெசவு நூல்கள் ஆகியவை வழங்க வேண்டும் போன்ற எதிர் பார்ப்புகளை நிறைவேற்றினால் மட்டுமே இனிவரும் காலங்களில் நலிந்து வரும் நெச வுத் தொழிலை மீட்க முடியும் என்பதே நெசவாளர்களின் கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.