இந்தியாவில் 3,623 பேருக்கு ஒமைக்ரான்

இந்தியாவில் 3,623 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்


இந்தியாவில் 3,623 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 40,863 பேருக்கு கரோனா நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. ஒமைக்ரான் வகை தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 3,623 ஆக உள்ளது.

நாட்டிலேயே அதிகளவாக மகாராஷ்டிரத்தில் 1,009 பேருக்கு ஒமைக்ரான் வகை கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தமிழகத்தில் 185 பேருக்கு ஒமைக்ரான் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

100-க்கும் அதிகமாக ஒமைக்ரான் பாதிப்புகளைக் கொண்டு மாநிலங்கள்:

  • மகாராஷ்டிரம் - 1,009
  • தில்லி - 513
  • கர்நாடகம் - 441
  • ராஜஸ்தான் - 373
  • கேரளம் - 333
  • குஜராத் - 204
  • தமிழ்நாடு - 185
  • ஹரியாணா - 123
  • தெலங்கானா - 123
  • உத்தரப் பிரதேசம் - 113

ஒமைக்ரான் வகை தொற்றால் மொத்தம் பாதிக்கப்பட்டவர்களில் 1,409 பேர் குணமடைந்துவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com