பிப்ரவரியில் தீவிரமடைந்து பிறகு குறையக்கூடும்: நிபுணர்

பிறகு வேகமாகக் குறையத் தொடங்கும் என்று அசோகா பல்கலைக்கழக மற்றும் சென்னை கணித  அறிவியல் மையத்தின் பேராசிரியர் கௌதம் ஐ மேனன் தெரிவித்துள்ளார்.
பிப்ரவரியில் தீவிரமடைந்து பிறகு குறையக்கூடும்: நிபுணர்
பிப்ரவரியில் தீவிரமடைந்து பிறகு குறையக்கூடும்: நிபுணர்


வேலூர்: நாட்டில் தற்போது அதிகரித்துவரும் கரோனா தொற்றானது, ஜனவரி இறுதி அல்லது பிப்ரவரி தொடக்கத்தில் உச்சத்தைத் தொட்டு, பிறகு வேகமாகக் குறையத் தொடங்கும் என்று அசோகா பல்கலைக்கழக மற்றும் சென்னை கணித  அறிவியல் மையத்தின் பேராசிரியர் கௌதம் ஐ மேனன் தெரிவித்துள்ளார்.

அவரிடம் எடுத்த நேர்காணலில், நாட்டில் இதுவரை சுமார் 30 லட்சம் இந்தியர்கள் கரோனாவுக்கு பலியாகியிருக்கலாம் என்று அதிர்ச்சியளிக்கும் தகவலை தெரிவித்துள்ளார். நாட்டின் மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிடும் புள்ளிவிவரமோ இதனை 4.83 லட்சம் என்கிறது.

முந்தைய வைரஸ்களைக் காட்டியலும் ஒமைக்ரான் தீவிரம் குறைவாக உள்ளதா?
டெல்டாவைப் போல அல்லாமல், உலகம் முழுக்க ஏற்கனவே டெல்டா வைரஸால் அல்லது அதற்கு முந்தைய அலைகளின் பாதிப்பு அல்லது கரோனா தடுப்பூசி செலுத்திக் கொண்டதால், நோய் எதிர்ப்பாற்றலைக் கொண்டிருப்பவர்களை தாக்கும் போது, அதன் தீவிரம் குறைவாக உள்ளது. இதுவும், கரோனா பாதித்து, மருத்துவமனைக்கு வரும் நோயாளிகளின் எண்ணிக்கையை வெகுவாகக் குறைக்கும் காரணியாகக் கருதப்படுகிறது. 

இரவு நேர மற்றும் வார இறுதிநாள்களில் ஊரடங்கு பலனளிக்குமா?
இரவு நேர ஊரடங்கை நான் வரவேற்கவில்லை. இரவு நேர ஊரடங்குகளால், அரசுகள் நினைக்கும் எதையும் சாதிக்க முடியாது என்றே நான் நம்புகிறேன். அதேவேளையில் திரையரங்குகள்,  உணவகங்களில் கூட்டத்தை குறைக்கும்போது, அது நிச்சயம் கரோனா பரவல் விகிதத்தைக் குறைக்கும். காற்றோட்டம் இல்லாத உள்ளரங்குகளில் நடைபெறும் நிகழ்ச்சிகளுக்குத் தடை விதிப்பது நல்ல பலனை அளிக்கும் என்றார்.
 

பள்ளிகளில் நேரடி வகுப்புகளுக்கு அனுமதிக்கலாமா?
ஒமைக்ரான் வேகமாகப் பரவி வரும் நிலையில், பிள்ளைகளை வீட்டிலேயே இருந்து கல்வி கற்க அனுமதிக்கலாம். பள்ளிகள் நடத்தப்படுவதைத் தவிர்க்கலாம். பள்ளிச் செல்லும் சிறார்கள் இருக்கும் வீடுகளில் பெரியவர்கள் அனைவரும் கரோனா தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். பள்ளிகள் செயல்படுமாயின், அனைத்து ஊழியர்களும் ஆசிரியர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும். 

தற்போதைய கரோனா புதிய அலை எப்போது உச்சம் தொடும்?
தற்போது பரவி வரும் கரோனா வைரஸ் குறித்த ஆய்வில் தெரிய வந்திருப்பதாவது, ஜனவரி இறுதியில் அல்லது பிப்ரவரி துவக்கத்தில் கரோனா பாதிப்பு உச்சம் தொடும். ஆனால் அதன்பிறகு பாதிப்பு மெல்ல குறையத் தொடங்கும். இதற்குக் காரணம், ஒமைக்ரான் தொற்றானது மிக வேகமாகப் பரவும் தன்மை கொண்டது. சில மாநிலங்களில், இந்த பாதிப்பு ஏற்படாது என்றும் அவர் தெரிவித்தார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com