நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

நாட்டில் ஒமைக்ரான் பாதிப்பு 4,461 ஆக உயா்வு

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,461-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

News image

கோப்புப்படம்

Updated On :11 ஜனவரி 2022, 10:50 am

IANS

நாட்டில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று பாதிப்பு எண்ணிக்கை 4,461-ஆக அதிகரித்துள்ளதாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் ஒமைக்ரான் வகை கரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. புதியவகை ஒமைக்ரான் தொற்று 28 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் பரவியுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

நாட்டில் ஒமைக்ரானால் அதிகபட்சமாக மகாராஷ்டிரத்தில் 1247 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அதைத் தொடர்ந்து இரண்டாவதாக ராஜஸ்தான் 645 பேர், அதைத்தொடர்ந்து தில்லி 546 பேர், கர்நாடகம் 479 பேர், கேரளம் 350 பேர், உ.பி. 275 பேர், குஜராத் மற்றும் தமிழ்நாட்டில் 236 மற்றும் 185 பேருக்கும், தெலங்கானா 123 பேர், ஹரியானா 123 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 

கோவா, மணிப்பூர், சட்டிஸ்கர், ஹிமாச்சல் பிரதேசம் தலா ஒருவருக்கு ஒமைக்ரான் கண்டறியப்பட்டுள்ளது. 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.