
பெங்களூருவில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள்
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 412 கட்டுப்பாட்டு பகுதிகள் தொற்று அதிகம் பரவும் அபாயகரமான நிலையில் உள்ளதாக மாநகராட்சி அறிவித்துள்ளது.
பெங்களூருவில் கரோனாவால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை அதிக்ரித்து வருகிறது. இதன் விளைவாக கட்டுப்பாட்டு பகுதிகளில் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
படிக்க | ஹைதராபாத் மருத்துவமனைகளில் ஏராளமான குழந்தைகள் அனுமதி
கரோனாவைக் கட்டுப்படுத்த தடுப்பூசி முகாம்களின் எண்ணிக்கையை அதிகரித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணிகளில் மாநகராட்சி நிர்வாகம் ஈடுபட்டுள்ளது.
தற்போது 412 பகுதிகளில் கரோனா தொற்று அதிகம் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பெங்களூரு மாநகராட்சி அறிவித்துள்ளது.
படிக்க | தெலங்கானா காளி கோயிலில் மனித தலை: உடலைத்தேடும் காவல் துறை
அதிகபட்சமாக மஹாதேவபூர் பகுதியில் 143 பகுதிகளுக்கு மாநகராட்சி சார்பில் சீல் வைக்கப்பட்டுள்ளன. அதற்கு அடுத்தபடியாக பொம்மனஹள்ளி பகுதியில் 100 இடங்களும், தெற்கு பெங்களூருவில் 49 இடங்களும், மேற்கு பெங்களூருவில் 44 இடங்களும், கிழக்கு பெங்களூரு 33 இடங்களும், யெலஹங்கா 33 இடங்களும் கட்டுப்பாட்டு பகுதிகளாக அறிவிக்கப்பட்டுள்ளன.